வால்மார்ட் அமெரிக்காவை அழித்துககொண்டு இருக்கிறதா?

 வால்மார்ட் அமெரிக்காவை அழித்துககொண்டு இருக்கிறதா? வால்மார்டை பற்றிய உண்மைகள்! இது உங்களுக்கு முற்றிலும் அதிர்ச்சியைக் தரும் .

அமெரிக்கா வால் மார்டை முற்றிலும்_நேசிக்கிறது. அமெரிக்காவில்

ஒவ் வொரு வாரமும் 100 மில்லியன் (10கோடி) வாடிக்கையாளர் கள் வால்மார்ட் கடைகளுக்குச்சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் வால்மார்ட் அமெரிக்காவுக்கு நல்லதா? நன்மையா? பெரும்பாலான மக்கள் இந்த கேள்வியை கேட்பதில்லை. நம்மில் பெரும்பாலோர் பெரிய, சுத்தமாக உள்ள கடைகளில் பொருட்களை வாங்கவே விரும்புகின்றோம். அந்த கடைகளில் மிக மலிவாக பொருட்கள் கிடைப்பது நமக்கெல்லாம் மிகவும் பிடிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் வால்மார்ட் அமெரிக்காவை பல வழிகளில் நாசமாக்கிக் கொண்டுள்ளது.

வால்மார்ட் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான சிறு வணிகங்களை, எண்ணிக்கையில் அடங்காத வேலை வாய்ப்புகளை கடந்த பல வருடங்களில் அழித்து துடைத்து எறிந்து விட்டது. வால்மார்ட் ஒரு மிகப்பெரிய சிறு வணிக பஸ்மாசுரனாக வளர்ந்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள வேறு எந்த சிறு வணிக நிறுவனத்தைக் காட்டிலும் வால்மார்ட் ஐந்து பங்கு அதிக பொருட்களை விற்பனை செய்கிறது. துரதிர்ஷ்டவசமாக வால்மார்ட் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் மிக அதிக சதவீதப் பொருட்கள் “வெளிநாடுகளில் தயாரிக்கப் பட்டவை”. இதன் காரணமாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களிட மிருந்து பறிக்கப்பட்டுள்ளன, அமெரிக்க பொருளாதாரத்திற்கு எவ்வளவு ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கோடிகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இவை எல்லாவற்றின் காரணமாகவும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என்பதை கணக்கிடவே முடியாது. நம்முடைய பொருளாதார நிலைமை எங்கு போய்க் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வால்மார்ட்டின் உதாரணத்தைப் பார்த்தாலே போதும். மிகவும் அதிகமாக எல்லா அதிகாரங்களை யும் தங்களிடம் குவித்து வைத்துக் கொண்டுள்ள பகாசுர கம்பனிகள் “நம்முடைய பொருளாதாரத்தை முழுவதுமாக, முற்றிலுமாக ஆட்டிப் படைத்து வருகின்றன. இத்தகைய கம்பனிகள் எவ்வித இரக்கமும் இன்றி எல்லா விதமான வர்த்தகப் போட்டிகளையும் நசுக்குகின்றன. இந்த கம்பனிகள் செலவைக் குறைப்பதற்காக எதையும் செய்ய, எந்த கீழ்த்தரமான நிலைக்கும் இறங்கத் தயாராக உள்ளன. இத்தகைய வகுப்புவாத, பகாசுர கம்பனிகளுக் காகத்தான் நாம் எல்லோரும் எதிர்காலத்தில் வேலை செய்யப் போகிறோமா? ஒரு மிக சிறிய குழுவிடம் எல்லா பொருளாதார செல்வ வளங்களையும் கொண்டு குவிக்கும் இத்தகைய கம்பனிகளுக்காகதான் நம்முடைய உழைப்பு செலவாகப் போகிறதா? இம்மாதிரித்தான் கம்முனிஸ்டு சீனாவில் நடக்கிறது. அமெரிக்காவில் “சுதந்திரப் பொருளாதாரம்” என்று பறைசாற்றப்படுகிறது. அமெரிக்காவை “போட்டிகள் மூலம்” “இணைந்து செயல்படுவதன் மூலம்” முன்னேற்றப் போவதாக சொல் கின்றனர். ஆனால் வால்மார்ட் இவை அனைத்தையும்தான் அழித்து நாசமாக்கி வருகிறது.

வால் மார்ட் பற்றிய கீழ்காணும் 20 உண்மைகள் உங்களை முற்றிலும் அதிர்ச்சி அடையச் செய்யும்.

1) வால்மார்ட்டில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க குடும்பம் சராசரியாக 4,000 அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறது.

2) 2010௦ ஆம் ஆண்டில் வால்மார்டின் வருமானம் 421பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 170,வெவ்வேறு நாடுகளின் ஒட்டு மொத்த வருமானத்தைக் காட்டிலும் வால்மார்டின் இந்த வருமானம் அதிகம். இந்த 170 நாடுகளில் நார்வே, வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் போன்ற நாடுகளும் அடங்கும்.

3) வால்மார்ட் ஒரு தேசமாக இருந்தால் அதன் ஒட்டு மொத்த வருமான அடிப்படையில் அது உலக அரங்கில் 23 வது மிகப் பெரிய நாடாக விளங்கும்.

4) அமெரிக்காவில் வேறு எவரைக் காட்டிலும் வால்மார்ட் மிக அதிக அளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு 4 டாலர்களிலும் 1 டாலர் வால் மார்டில் மளிகைப் பொருட்கள் வாங்க செலவிடப்படுகிறது.

5) ஒவ்வொரு வாரத்திலும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் வால்மார்ட்டில் பொருட்களை வாங்குகின்றனர்.

6) 2005 ஆம் ஆண்டில் இருந்து மட்டும், வால்மார்ட் 1100 கும் மேற்பட்ட “பிரம்மாண்டமான கடைகளை” துவக்கியுள்ளது.

7) இப்போது வால்மார்ட்டில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

8) வால்மார்ட்டுக்கு என ஒரு ராணுவம் இருந்தால், சீனாவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய ராணுவம் வால்மார்ட்டிடம்தான் இருக்கும்.

9) அமெரிக்காவில் 25 வெவ்வேறு மாநிலங்களில் வால்மார்ட் தான் மிகப் பெரிய “வேலை கொடுத்துள்ள முதலாளி”.

10) எகனாமிக் பாலிசி இன்ஸ்ட்டிடுட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். 2001 இல் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால், அமெரிக்காவில் 133000 “உற்பத்தி வேலை வாய்ப்புகள்” பறிபோய்விட்டன. இதை அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

11) வால்மார்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பது அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒரு வருடத்தில் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகம்.

12) வால்மார்ட் கம்பனியின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குழந்தைகளும் “மருத்துவ வசதி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது மருத்துவ செலவுகளை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது. வால்மார்ட் கம்பனி அல்ல.

13) 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில் வால்மார்ட் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 9 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

14) 96 சதவீத அமெரிக்கர்களுக்கு 20 மையில்களுக்குள் ஒரு வால்மார்ட் கடை உள்ளது.

15) 1992 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் ஒட்டு மொத்த “சுதந்திர சிறு வணிகர்களின் எண்ணிக்கையில்” 60000 சரிந்துவிட்டது.

16) 2011 ம் ஆண்டில் வால்மார்ட் “அரசியல் லாபி” செய்ய 7.8 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. இதை “சென்டர் பார் ரெஸ்பன்சிவ் பொலிடிக்ஸ்” என்னும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ந்து தெரிவித்துள்ளது. இந்தத் தொகையில் பிரசார செலவுகள் சேர்க்கப்படவில்லை.

17) கஸ்ட்கோ என்பது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சிறு வணிகத் துறை நிறுவனம் ஆகும். அதை விட 5 மடங்கு அதிகமாக வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்கிறது.

18) வால்மார்ட் கம்பனியின் வெறும் ஆறு குடும்பங்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 30 சதவீத அமெரிக்க ஏழைகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்புக்கு சமம்.

அமெரிக்கா முழுவதிலும் சுதந்திரமான சிறு வணிகர்கள் வியாபாரத்தை இழுத்து மூடி கொண்டுள்ளனர். ஏன் என்றால் வால்மார்ட்டுடன் அவர்களால் போட்டி போட முடியவில்லை. வால் மார்ட் கொண்டு வந்து கொட்டும் மிகக் குறைந்த மலிவான சீனப் பொருட்களுடன் அவர்களால் மோத இயலவில்லை. தங்களுடைய பகுதிகளில் வருவதற்காக வால்மார்ட்டுக்கு சமூகங்கள் நிறைய வரி சலுகைகளை வாரிக் கொடுக்கின்றன. ஆனால் வால்மார்டை அழைத்து வருவதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள சிறு வணிகங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதை மக்கள் உணர மறுக்கின்றனர்.

அங்கு ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சிறு நகரங்களில் உள்ளூர் வணிகம் 172 என்ற சதவீதத்திலும், கிராமப்புறங்களில் 61.4 என்ற சதவீதத்திலும் சரிந்துவிட்டது. இதன் விளைவாக கடந்த 13 வருடங்களில் 2.46 அமெரிக்க டாலர்கள் பெறுமான இழப்பு வால்மார்ட்டால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் அடிமை வேலை நடைபெறுகிறது. அங்கு வால்மார்ட் கொடுக்கும் கூலி மிகவும் குறைவு. அவர்கள் தயார் செய்யும் பொருட்களை வால்மார்ட் அமெரிக்கா வுக்கு கொண்டு வந்து விற்கிறது. இதன் விளைவாக நன்கு வருமானம் ஈட்டக் கூடிய அமெரிக்க வேலைகள் நாசமாக்கப்படுகின்றன. அமெரிக்கா ஏழை நாடாக மாறிவருகிறது. இந்த விஷயம் திரும்பத் திரும்ப அமெரிக்க மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்.

மக்கள் அரங்கத்தில் வால்மார்ட் ஒன்று சொல்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அது வேறு ஒன்றை செய்கிறது. அமெரிக்காவில் உற்பத்தி செய்வது சம்பந்தமாக, வேலை வாய்ப்புகளைக் குறித்து வால்மார்ட் சிறிதும் அக்கறைப்படுவது இல்லை. தங்களுக்கு எவ்வளவு மலிவாக பொருட்கள் கிடைக்குமோ அவ்வளவு மலிவாக பொருட்களை வாங்கத்தான் வால்மார்ட் அக்கறை காட்டுகிறது. இந்த மாதிரி மலிவான பொருட்கள் அனைத்தையும் சீனாவில் இருந்துதான் வால்மார்ட் பெறுகிறது.

81 வயதான துணிகள் உற்பத்தி செய்யும் ஒரு முதலாளியின் இந்த அனுபவத்தை கேட்டுவிட்டுப் பிறகு நீங்களே முடிவு செய்யலாம். அவர் பின்வருமாறு சொல்கிறார்.

“தென்மேற்கு துணி உற்பத்தியாளர்கள் வணிகர்கள் சங்கத்தின் தலைவராக நான் இருந்தேன். 1985 கும் 1990 கும் மத்தியில் ஒரு கூட்டம் நடந்தது. டல்லஸ் நகரில் எங்கள் சங்கத்திற்கு ஒரு அழகான கட்டடம் இருந்தது. இப்போது அது தரைமட்டம் ஆக்கப்பட்டுவிட்டது. ஏன் என்றால் அங்கு வந்து கொண்டு இருந்த சுதந்திரமான வர்தகர்கள் இப்போது அங்கு வருவதில்லை. வால்மார்ட் ஆட்கள் எங்கள் ஸ்தாபனத்தை அணுகினர். நான் மேலே குறிப்பிட்ட கட்டடத்தில் எங்களை வந்து சந்திக்க இயலுமா என்று கேட்டேன். வால்மார்ட்டில் இருந்து இருவர் எங்களை சந்தித்தனர். வெளிநாடுகளில் இருந்து தாங்கள் பொருட்களை தருவிக்கப் போவதாக அவர்கள் சொன்னார்கள். நுகர் பொருட்களுக்கு அவர்கள் சொல்லும் விலையைத் தான் வைக்க வேண்டும் என்றும் அதற்கு நாங்கள் தயாராகவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். உலகம் முழுவதிலும் இருந்து நாங்கள் பொருட்களை வாங்கப் போகிறோம் என்று அவர்கள் மேலும் சொன்னார்கள். வால்மார்ட் கம்பெனி ஒன்று,மட்டும்தான் முன்வந்து இதை சொன்னது.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் நான் அவர்களுக்கு சில பொருட்களை விற்று வந்தேன். வால்மார்ட் ட்ரக்குகளின் பின்னால் “அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டு வாருங்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது. வால்மார்ட் கடைகளில் “அமெரிக்காவில் வைத்து இருங்கள்” என்று எழுதப்பட்ட பெரிய பெரிய பேனர்கள் அந்த காலத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும். இதை எல்லாம் வந்தவர்களிடமும், என்னிடம் பொருள் வாங்க வருபவர்களிடமும் நான் நினைவூட்டினேன் இவை எல்லாம் உள்ளூர் அமெரிக்கர்களை கவர்வதற்காக, உண்மையில் உலகம் முழுவதிலும் இருந்து எங்கு பொருட்கள் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்குதான் வால்மார்ட் கம்பெனி வாங்கும் என்று அந்த ஆட்கள் சொன்னார்கள்.

சொல்வது ஒன்று. செய்வது வேறு. அதுதான் வால் மார்ட்.

நான் முன்பே எழுதியது போல் 2001 இல் இருந்து வால்மார்ட் கம்பனியால் அமெரிக்காவுக்கு 56000 பொருட்களை உற்பத்தி செய்யும் வசதிகள் பறிபோய் விட்டன.

வால்மார்ட் கம்பனியால் அமெரிக்கா லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறது. அவைகளை திரும்ப மீட்டு எடுக்கவே இயலாது. சீனா 2001 ஆம் ஆண்டில் உலக வர்த்தக ஸ்தாபனத்தில் உறுப்பினரானது. அந்த தருணத்திலிருந்து அமெரிக்கா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50000 பொருட்களை உற்பத்தி செய்யும் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது. இதை உங்களால் நம்ப முடியுமா?

சென்ற வருடம் சீனாவுடன் அமெரிக்காவுக்கு இருந்த “வர்தகப் பற்றாக்குறை” போல், உலக சரித்திரத்திலேயே எந்த ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுடன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது இல்லை. இதில் “வால்மார்ட் கம்பெனிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு”.

உண்மையில் வால்மார்ட் கம்பெனி சில அமெரிக்க பொருள் உற்பத்தியாளர்களை அமெரிக்காவில் கடையை மூடிவிட்டு வெளிநாடுகளில் கடைவிரிக்க பலவந்தப் படுத்தியுள்ளது.அமி ட்ரயுப் என்பவர் சமீபத்தில் கீழ்க்கண்ட கட்டுரையை எழுதி உள்ளார்.

வால்மார்ட்டின் “சந்தை சக்தி” மிகப் பெரியது. வால்மார்ட்டுக்கு பொருட்களை விற்கும் மிகப்பெரிய கம்பெனிகளிடம் கூட இன்னும் குறைந்த விலைக்கு கொடு, இன்னும் குறைந்த விலைக்கு கொடு என்று பிடுங்கும் வால்மார்டின் வற்புறுத் தலை நிராகரிக்க முடியாது. ஏன் என்றால் பிறகு அவர்களுடைய பொருட்களை அவர்கள் விற்கவே முடியாமல் வால்மார்ட் செய்துவிடும். வால் மார்ட்டின் வலிமை அத்தகையது. அமெரிக்காவில் லெவி கம்பெனி “ஜீன்சுகளை” தயாரிக்கிறது. மாஸ்டர் லாக் கம்பெனி பூட்டுகளைத் தயாரிக்கிறது. இந்த மிகப் பெரிய கம்பனிகளை அமெரிக்க தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளி இடங்களுக்கு சென்று பொருட்களை உற்பத்தி செய்யுமாறு வால்மார்ட் செய்து விட்டது. என்னென்றால் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்னும் வால்மார்டின் நிர்பந்தத்திற்கு இந்த மிகப் பெரிய கம்பனிகள் கூட தலை வணங்க வேண்டியதாயிற்று.

வால்மார்ட் அமெரிக்க சமூகங்களிடம் இருந்து மிகப் பெரிய செல்வ வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க சமூகங்களுக்கு வால்மார்ட் எந்த செல்வ வளத்தையும் திருப்பி தருவதில்லை. கோடி கோடி லாபங்கள் அனைத்தும் வால்மார்ட் அதிபர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. வால்மார்ட் கொடுக்கும் விலை குறைந்த பொருட்களை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வால் மார்ட்டுக்கு நாம் கொடுக்கும் பணம் எல்லாம் அமெரிக்க உள்ளூரில், உள்ளூர் சந்தைகளில் மிக மிகக் குறைந்த அளவுக்கு திருப்பி விடப்படுகிறது. திருப்பி கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் மிகவும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் ஆகும்.

பண்டைய நாட்களில் நீங்கள் எலெக்ட்ரானிக் பொருட்களையோ அல்லது ஒரு மளிகைக் கடை நடத்தியோ உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஆனால் வால்மார்டில் வேலை செய்து உங்கள் குடும்பத்தை நீங்கள் காப்பாற்றிவிட முடியாது. வால்மார்டில் பெரும்பாலான வேலைகளுக்கு மிக மிகக் குறைந்த ஊதியமே கொடுக்கப்படுகிறது. வால்மார்ட் ஊழியர்கள் பெரும்பாலோர் மிக மிக ஏழைகளாக உள்ளனர். அமெரிக்காவில் வேலை செய்யும் ஏழைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள அனைத்து வேலைகளிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகள் “குறைந்த சம்பளத்தில்” உள்ளன. அமெரிக்காவில் “மத்திய தர வர்க்கம்” என்பது இப்போது வெகு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது.

அமெரிக்க வேலைகளையும், அமெரிக்க உற்பத்திகளையும் நாம் ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் அவைகள் நம்மை விட்டுப் போய்விடும். அமெரிக்காவில் வேலை இல்லாமல், அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை பன் மடங்கு இன்னும் அதிகமாக அதிகரித்துவிடும்.

வேலைகள் இல்லாமல் அமெரிக்காவில் செழிப்பு ஏற்படாது. ஆனால் துரதிருஷ்ட வசமாக ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் எவ்வாறு வேலை வாய்ப்புகள், வேலைகள் திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்படுகின்றன என்பதை பெரும்பாலான அமெரிக்கர்கள் புரிந்து கொள்வது இல்லை.

அமெரிக்கா இன்று சென்று கொண்டு இருக்கும் பாதை முழுமையான, முற்றிலுமான அழிவிற்குதான் இட்டுச் செல்லப்போகிறது. அமெரிக்காவை பணக்கார நாடு என்ற நிலையில் இருந்து ஏழை நாடாக மாற்றிக் கொண்டு உள்ளனர். முடிவில் ஒவ்வொரு சிறிய அறிவு ஜீவி கூட அமெரிக்காவை அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடுவார். அமெரிக்காவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று அரசாங்கத்தை சார்ந்து இருப்பார்கள் அல்லது வேலை செய்யும் ஏழைகளாக ஆகி விடுவார்கள்.

அமெரிக்க அமைப்பு வெளிப்படையான நேர்மையான போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளதாக நாம் நினைக்கிறோம். ஆனால் வால்மார்ட் இத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் கம்பனி அல்ல. வால்மார்ட் சிறு வணிகங்களை நசுக்கும் கம்பனி. அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்களை வால்மார்ட் நிர்மூலம் ஆக்குகிறது. இப்படி எல்லாம் செய்துதான் சீனாவில் தயாரிக்கப்பட்ட மிக மலிவான பொருட்களை வால்மார்ட் அமெரிக்கர்களான நம்மை வாங்க வைக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...