மிகபெரிய ஊழலுக்காக மன்மோகன் சிங் அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தோல்வியைதான் பரிசாக தருவார்கள் இந்த தோல்வி இமாசலபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொடங்கட்டும் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
இமாசலபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; கடந்த 1989-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு, 400க்கும் அதிகமான எம்பி.க்களின் ஆதரவுடன் பதவியில்_இருந்தது. ஆனால் போபர்ஸ் ஊழல் வெளியானவுடன், மக்கள் அந்த அரசை வீட்டுக்கு அனுப்பினர். அதேகதிதான், மன்மோகன் சிங் அரசுக்கும் நேரும்.
அபரிமிதமான ஊழலை செய்துள்ள இந்த அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வந்துவிடும்.அதில் காங்கிரசுக்கு மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள்.
இந்த தோல்வி இமாசலபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொடங்கட்டும். இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்குவரும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ.க உறுதி பூண்டுள்ளது. இதற்கான சட்டமுட்டுக்கட்டைகள் விரைவில் விலகும் என நம்புகிறேன்.
கடந்த 1952-ம் ஆண்டில் நடந்ததைபோன்று , பாராளுமன்றத்துக்கும் சட்ட சபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும். ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்கவேண்டும். இவையெல்லாம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்றார்
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.