பா.ஜ.க மூத்த தலைவரும் குஜராத் , ராஜஸ்தான் மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கைலாஷ்பதிமிஸ்ரா பாட்னாவில் இருக்கும் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. அவருக்கு திருமணமாகவில்லை.
பீகாரின் புக்சாரா மாவடடத்தில் இருக்கும் துதார்சாக் பகுதியில் பிறந்த கைலாஷ்பதி மிஸ்ரா, குஜராத் மாநில ஆளுநராகவும் . ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார், 1977-ஆம் ஆண்டு பீகார் நிதியமைச்சராக பொறுப்புவகித்தார். 1980-ஆம் ஆண்டு பா.ஜனதாவின் பீகார் மாநில முதல்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1995- முதல் 2003 ஆண்டு வரை பா.ஜ.க.,வின் தேசிய தலைவராகவும் செயல்பட்டார். அவருக்கு வயது 89 . அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பா.ஜ.க பீகார் மாநில தலைவர் சிபி.தாக்கூர் ஆகியோர் அவரது வீட்டுக்குச்சென்று அஞ்சலி செலுத்தினர். மிஸ்ரா உடல் முதலில் சட்டமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பிறகு மாலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம்செய்யப்பட உள்ளது.
கைலாஷ்பதி மிஸ்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை தலைவர் அருண்ஜெட்லி, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் பீகார் வருகின்றனர்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.