சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது, ஜனதா கட்சியின் தலைவர், சுப்ரமணிய சாமி கூறியிருக்கும் 1,600 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு பதில் தர வேண்டும் என, பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.
சுப்ரமணியசாமி, சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது, 1,600 கோடி ரூபாய் சுருட்டல்முயற்சி புகாரை தெரிவித்தார்.அவரது புகாரின் படி முன்னாள் பிரதமர், ஜவகர்லால் நேருவால் , 1938 ஆம் வருடம் துவங்க பட்ட “அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ எனும் பத்திரிகைக்கு, காங்கிரஸ் மேலிடம்,ரூ 90 கோடியை கடனாக வழங்கியது.
அந்தக் கடனுக்காக, அந்த பொதுத்துறை நிறுவனத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ‘யங் இந்தியன்ஸ்’ என்ற நிறுவனம் கையகப்படுத்த முயற்சிக்கிறது, இந்த நிறுவனத்தில் சோனியா மற்றும் ராகுலுக்கு, 76 சதவீத பங்குகள் உள்ளன என்பது சிறப்பு அம்சம் .
அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு , டில்லி மற்றும் உபி.,யின் , பல இடங்களில் 1,600 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து, பாஜக மூத்த தலைவர், அருண் ஜெட்லி, கூறியதாவது ; முதலில், சுப்ரமணிய சாமியின் புகாருக்கு பதில்சொல்லுங்கள். அரசியல் கட்சி யான காங்கிரஸ், ஒருநிறுவனத்திற்கு எதற்கு , 90 கோடி ரூபாயை கடன் கொடுக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினர்
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.