தமிழகத்தில் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராமசாமி நாயக்கர் என்கிற கன்னடர், தமிழர்களிடையே உண்டாக்கிய பேதத்தின் விளைவே இன்றும் ஸ்ரீரங்கம் உணவு விடுதி பெயரில் பிரச்சனையாகி எதிரொலித்தது.
நாயுடுஹால், உம்மிடி பங்காரு செட்டி, ஜெயின் பில்டர்ஸ், தேவர் சன்ஸ், நாடார் சன்ஸ் என்று ஜாதிப்பெயரில் இருக்கும் கடைகள் முன்போ கிறிஸ்டியன் காலேஜ் என்று மத பெயருள்ள கல்லூரி முன்போ இந்த `போலி ஜாதி வெறியர்கள்’ போராடுவது இல்லை. வேறு எந்த ஜாதியினரைப் பார்த்தும் கேட்க முடியாத கேள்வியை அதாவது `நீ ஏன் ஜாதிப்பெயரை வைத்திருக்கிறாய் என்பதை பிராம்மண சமூகத்தினரை பார்த்து திமிராக கேட்க முடியும்.
உதாரணத்திற்கு திரை இயக்குநர் கரு.பழனியப்பன் தன் படத்தில் ஒப்பந்தமான ஜனனி என்ற நடிகையை, அவர் `ஜனனி ஐயர்’ என்று பெயர் வைத்துக் கொண்டதை கடுமையாக கண்டித்தாராம். ஆனால் கரு.பழனியப்பன் ஐஸ்வர்யா ராய் , ஷ்ரேயா ரெட்டி லக்ஷ்மிராய் , நவ்யா நாயர், அனுஷ்கா ஷெட்டி சமீரா ரெட்டி, காம்னா ஜெத்மலானி என்று நடிகைகளைப் பார்த்தால் இப்படி பொங்கி எழுவாரா.
சமீபத்தில் பாடகி சின்மயியை, ட்விட்டரில் `பாப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணணும் என்று மோசமாக எழுதியுள்ளதை மீடியாக்கள், பத்திரிகைகள் செய்தியாகப் போட்டதே தவிர, மறந்தும் கூட தன் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
நன்றி அக்கப்போர் ; கஷ்துரி ரங்கன்
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.