டெல்லியில் காமுகர்களிடம் சிக்கி, கற்பை பறிகொடுத்து, உயிரையும் விட்ட மாணவியின் உடல்தகனம் நேற்று காலை எந்த முன்னறிவிப்பும் இன்றி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த செயலுக்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இந்த செயல்கள் நெருக்கடி காலத்தை நினைவூட்டுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், நேற்று நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
டெல்லியை எதற்காக ராணுவ பகுதி பொண்டு மாற்றினீர்கள்? இந்த செயல்கள் நெருக்கடி காலத்தை நினைவூட்டுகிறது . மாணவியின் மறைவால் தேசமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தனது நம்பிக்கை இன்மை, கோபத்தை, வேதனையை வெளிப் படுத்தும் உரிமை நாட்டுக்கு_இருக்கிறது. ஏன் டெல்லியை இப்படி சீல்வைக்க வேண்டும்? இது மிகமிக மோசமானசெயல்.
மெட்ரோ ரெயில்நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் எங்கும் போக முடியாதநிலை ஏற்பட்டது. இது ஜனநாயகம் தானா? மாணவியின் இறுதிச் சடங்கை அவசர அவசரமாக நடத்தியது ஏன்? இதை தவிர்த் திருக்க வேண்டும். தனிமனித சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் தான். ஆனால் இப்படி அவசரகதியில் செயல்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.