போபர்ஸ் ஆயுத பேர ஊழல் விவகாரத்தில் இத்தாலிய தொழில் அதிபர் குவாத்ரோச்சிக்கு சட்டவிரோதமாகப் பல கோடி ரூபா தரகுப்பணம் வழங்கப்பட்டிருப்பதாக வருமானவரி மேன்முறையீடு தீர்ப்பாய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்திய இராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1500 கோடி அளவில் ஊழல் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த 1989 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி பதவியிழந்து புதிய பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயற்பட்ட வின்சத்தாவும் இத்தாலியத் தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாள ரூ.64 கோடி தரகுப்பணம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்து சி.பி.ஐ. குவாத்ரோச்சிக்கு இந்த ஊழலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று நற்சான்று வழங்கியிருந்தது. ,
குவாத்ரோச்சியின் வங்கிக்கணக்கு முடக்கத்தையும் சி.பி.ஐ. நீக்கிவிட்டது. இதற்கிடையில் வின்சத்தா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது. குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கையும் கைவிடுவதற்காக டில்லி மெட்ரோபொலிட்டன் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளத,
இந்த நிலையில், கடந்த 1987,88 ஆம் ஆண்டுக்கான வருமானவரி பாக்கியைச் செலுத்தும்படி வருமானவரித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வின்சத்தாவின் மகன் ஹெர்ஷ் என்பவர் வருமானவரி மேன்முறையீடு தீர்ப்பாயத்தில் (டிரிபியூனல்) வழக்குத் தொடர்ந்திருந்தார்.=========== நீதிபதிகள் ஆர்.சி.சர்மா,ஆர்.பி.துலானி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து கடந்த 31 ஆம் திகதியன்று தீர்ப்புக் கூறியது. மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இடைத்தரகர் வின்சத்தா,தொழிலதிபர் குவாத்ரோச்சி ஆகியோருக்கு ரூ.41 கோடி தரகாக வழங்கப்பட்டிருப்பதாகத் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர.
இந்தியாவில் அந்தத் தொகை வழங்கப்பட்டிருப்பதால் அதற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் தரகு பெறுவது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது) இந்தத் தீர்ப்பின் மூலம் போபர்ஸ் ஆயுதபேர ஊழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்ப்பை தொடர்ந்து போபர்ஸ் ஆணைக்குழு குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி வற்புறுத்தியிருக்கிறார். .
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ. எந்தவிதக் கமிஷனும் வழங்கப்படவில்லை என்று கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் வருமானவரித்துறை டிரிபியூனல் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் ஆணைக்குழு வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விசித்திரமான சூழ்நிலையில் இந்த விசாரணை அவசியமென்று அவர் விளக்கமளித்தார். .
சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஊழலை ஒழிக்க 5 அம்சத் திட்டமொன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார.
அதைச் சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி,ஊழலுக்கு எதிராக 5 அம்சத் திட்டம் தேவையில்லை. குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பும் ஒரு அம்சத் திட்டத்தைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக அருண்ஜெட்லி குறிப்பிட்டிருக்கிறார். ,
இதற்கிடையில் இந்தத் தீர்ப்புக் குறித்து உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டத,
டில்லியில் நிருபர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் அது குறித்து அறிந்தோம். தீர்ப்பு விபரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்துச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
{qtube vid:=sovx4XPb6Sg}
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.