56.1%மாக உயர்ந்த கார்ப்பரேட் வரிவசூல்

கார்ப்பரேட் வரிவசூல் 8.60 லட்சம் கோடி ரூபாய். இது சென்றஆண்டைவிட 56.1% அதிகம்.

கார்ப்பரேட் வரியை குறைத்து விட்டார்கள் என்று சொல்லித்திரியும் முரசொலி வாசகர்கள் கவனத்தில் கொள்க.

Tax to GDP ratio 11.7%. இது இந்திய வரலாற்றுசாதனை.

இதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிகளவில் தடுக்கப்பட்டது . நேர்மையான ஆட்சி நடப்பதால் மட்டுமே இதுசாத்தியமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மென் பொருளை பயன்படுத்தி GST மற்றும் IT வரிகள் சரிபார்க்க படுகின்றன. இதனால் வரிஏய்ப்புகள் குறைந்துள்ளன.

தனிநபர் வரிவசூல் 7.50 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டை விட 43% அதிகம்.கார், வீடு வாங்குதல், கிரெடிட்/டெபிட்கார்டு செலவுகள், வங்கி டெபாசிட்கள், சொத்து, வெளிநாட்டு சுற்றுலா என்று அனைத்து செலவுகளும் வருமான வரி யுடன் சரிபார்க்க படுகிறன.

Demonitisation சமயத்தில் வங்கிகளில் பணம் கட்டிய பலருக்கு வருமானவரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது; பலர் வருமான வரி அலுவலர்களின் கண்காணிப்பின்கீழ் வந்தனர். இது போன்ற நேரடி நடவடிக்கைகளினால், வரி ஏய்ப்பு குறைந்து வரிவசூல் அதிகரித்துள்ளன.

GST அறிமுகமான பிறகு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளினால் வரி ஏய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் மறைமுகவரி வசூல் 20% அதிகரித்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சில் வரிவிகிதம் ( Both Direct & Indirect tax rates) அதிகமாக இருந்தது. ஆனாலும் யாரும் எதிராக போராட வில்லை. ஏனென்றால், சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி, அலுவலர்களும் அரசியல்வாதிகளும் ஊழலில் சம்பாதிக்க, வரி ஏய்ப்பு அதிகரித்து, வரிவசூல் குறைந்தது.

ராஜீவ் காந்தி ஒருமுறை கூறிய விஷயம் இது – “அரசு ஏழைகளுக்காக 1 ரூபாய் செலவு செய்தால் 15 காசுதான் ஏழைக்கு செல்கிறது”. அவர் சொல்லமறந்த விஷயம் “மீதி 85% காங்கிரஸ் காரர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்”.

அனைத்திலும் ஊழல். பல லட்சம் கோடி ஊழல். இதனால் வரி வசூல் குறைந்தது.

ஆனால் இப்போது இந்த அவலநிலை மாறியது.

Tax Returns

நாம் தாக்கல்செய்யும் வருமான வரியை ஆங்கிலத்தில் Tax Returns என்று அழைக்கிறோம்.

நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தும்வரி நம்மிடம் திரும்ப வருகிறது.

நாம் கட்டிய வரி,

🙏80 கோடி மக்களுக்கு இலவச அரிசியாக திரும்ப நமக்கேவந்து பசிப்பிணி போக்கியது

🙏200 கோடி இலவச தடுப்பூசியாக திரும்ப நமக்கேவந்து உயிர் காத்தது

🙏12 கோடி விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாயாக, ஒருபைசா லஞ்சமாக இல்லாமல், நேரடியாக அவர்களுடைய வங்கிகணக்கில், திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது.

🙏10 கோடி இலவச கழிப்பிடங்களாக திரும்ப நமக்கேவந்து சேர்ந்து சுகாதாரம் காத்தது

🙏6 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய்மூலம் குடிநீராக திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது

🙏9 கோடி இலவசகேஸ் இணைப்பாக திரும்ப நமக்கே வந்து மகளிரின் உடல்நலம் காத்தது

🙏2 1/2 கோடி வீடுகளாக திரும்ப நமக்கேவந்து சேர்ந்தது

🙏அதுமட்டுமல்ல, சாலைகளாக, துறை முகமாக, இரயில்வே பாதைகளாக, மருத்துவ கல்லூரியாக, பல்கலைக்கழகமாக திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது

இது பாஜகவால் மட்டுமே சாத்தியமானது.

ஊழலற்ற ஆட்சி
உன்னதமான ஆட்சி
உண்மையான வளர்சி

பத்மநாபன் நாகராஜன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...