இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்த பிறகு , பாகிஸ்தானுடன் இயல்பான உறவு வைத்து கொள்வதற்கு, இனி என்னவேலை இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை, காட்டு மிராண்டி தனமானது, என்று பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; எல்லைபகுதியில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொண்ட விதம், ஈவு இரக்க மற்றது; காட்டு மிராண்டி தனமானது. இந்திய வீரர்களின் தலைகளை துண்டித்ததை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு காரணமானவர்களை , சட்டத்தின் முன்நிறுத்தி, கடும்தண்டனை பெற்றுத் தரவேண்டும். பாகிஸ்தான் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை உள்ளது. இது போன்ற காட்டுமிராண்டி தனமான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட பிறகும் , அந்த நாட்டுடன், இயல்பான உறவை வைத்துக்கொள்வது, இயலாதகாரியம். பாகிஸ்தான் ராணுவத்துடன் உறவை நீட்டிப்பதில், இனி எந்த_அர்த்தமும் இல்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம், தொடர்ந்து மறுத்துவருகிறது. இதை, அவர்களுக்கு புரியவைக்க, முயற்சி மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.