காங்கிரசின் ‘மோடி ‘நடுக்கம் !

 காங்கிரசின் 'மோடி 'நடுக்கம் ! காங்கிரசின் 'மோடி 'நடுக்கம் ! குஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை காங்கிரஸ் அரசு ஜீரணம் செய்து முடிப்பதற்க்குள் ,மோடி தன்னுடைய ஸ்டைலில் மத்தியில் உள்ளவர்களுக்கு இன்னொரு பேதி மருந்தைக் கொடுத்திருக்கிறார் .

'வைப்ரன்ட் குஜராத் 'என்ற பெயரில் குஜராத்தின் பொருளாதார .கட்டமைப்பு சாதனைகளை முன்னிறுத்தி குஜராத்தில் பிற மாநிலத்தவர்களும் பிற நாட்டினரும் மேலும் மூலதனம் செய்வதை ஊக்குவிக்கும் மாநாடு நடத்திருக்கிறார் .மோடி நடத்தும் ஆறாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இது .

வேறு சில மாநிலங்களும் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது வழக்கம்தான் .ஆனால் அந்தவகை மாநாடுகளுக்கு வரும் முதலீட்டாளர்கள் கூட்டம் ,கூட்டமாக  இருக்கும் .வந்ததற்கு வாய்நிறைய வாழ்த்திவிட்டு முதலீடு செய்யும் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டுச் செல்வார்கள் .அந்த மாநாட்டில் இத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டோம் என்று சொல்லி சாதனைக் கணக்கு அன்றைக்குக் கையெழுத்தாவதற்காகவே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தயார் செய்யப்படும்.கையெழுத்தாவதில் கால்வாசி கூட உண்மையான முதலீடாக உருப்பெறாது .

ஆனால் குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு உச்சி மாநாட்டில் 121 நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் ,அது தொடர்பான முகவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள் . புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – முதலீடுகள் எண்ணவடிவுகள் என சுமார் 18,000 ப்ரோஜெக்ட்களும் கையெழுத்தாகிருக்கிறது.இவற்றில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் சிறுதொழில் மற்றும் நடுத்தர நிலைத் தொழில்களுக்கான முதலீடு இதன் மூலம் குஜராத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது .இந்த முதலீட்டால் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் .

 பொதுவாக வேற்று மாநிலத்தில் ,வேற்று நாட்டில் முதலீடு என்பது மிகப்பெரிய தொழில்களிலும் கணரத் தொழில்களிலும்தான் அதிகம் நடைபெற்றது .ஒரே நிறுவனம் மூவாயிரம்- நாலாயிரம் கோடி என்று ஒரு ப்ரோஜெக்டில் மூலதனம் செய்வது இயல்பு .மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சியில் டாடா குழுமம்  மிகப்பெரிய முதலீடு செய்ய முனைந்தது ,அதை அப்போதைய எதிர்க் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக எதிர்க்கப்போய் ,டாடா குழுமம் மேற்கு வங்காளத்தை காலி செய்துவிட்டு அந்த ப்ரொஜெக்டை குஜராத்தில் மாற்றியது.24  மணி நேரத்தில் அத்தொழிலுக்குத் தேவையான அத்தனை அனுமதிகளையும் அளித்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார் மோடி.சமீபத்தில் திரினாமுல் ஆட்சியில் தொழிலாளர் தொடர்பான சில பிரச்சனைகளால் ஒரு மிகப்பெரிய கிளியரிங்-பார்வார்டிங் நிறுவனம் மேற்குவங்கத்தை காலி செய்து தன் தலைமையகத்தையும் தொழிலையும் குஜராத்துக்கு மாற்றிவருகிறது .

 குஜராத்தை பொருத்தவரை ஒருபுறம் டாடா குழுமத்தைப் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை ஈர்ப்பதுடன் சிறுதொழில் செய்வோரையும் சேர்த்தே ஈர்ப்பதுதான் ஆர்ச்சரியம். 2011-ம் ஆண்டு இந்தியாவில் சிறு – நடுநிலை தொழில் (SME ) வளர்ச்சி சராசரி 19 சதவிகிதம் என்றால் – குஜராத் (SME ) 85 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டது -குஜராத் என்ற ஒரே மாநிலத்தில் 85 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டது என்று எனும்போது குஜராத்தின் வளர்ச்சி வேகம் புரியும் .

சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 60,000 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள் .இதில் பெரும்பாலானோர் குஜராத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் .வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேல் .இந்த மாநாட்டிற்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களான டாடா ,பிர்லா,அம்பானி குழுமங்கள் அனைவரும் வந்தது .மோடியின்மேல் இந்தியாவின் வர்த்தக உலகிற்கு உள்ள ஆழமான நம்பிக்கை வெளிக்காட்டியது .

உலகெங்கிலுமிருந்து 145 பல்கலைக் கழகங்கள் இந்த மாநாட்டிற்கு வந்தது குஜராத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதை ஆராய முற்பட்டிருக்கின்றனர் .குஜராத் இளைஞர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி,அதன் விளைவாக குஜராத்திலிருந்து உலகின் பலமூலைகலுக்கும் ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் அனுப்ப வேண்டும் என்கிற தன் எண்ணத்தைத் காலத்தில் அரசு வளர்ச்சியடைந்த்துள்ள சீனாவிற்குப் போட்டியாக வளர்ந்து வரும் குஜராத்தை பார்த்து சீனா கற்றுக்கொள்ளலும் நிலை வரவேண்டும் என்பதே தன் கனவு என்கிறார் மோடி

குஜராத்திலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் சென்ற வருடம் சீனா சென்ற சில வியாபாரிகளைப் பிடித்து சீன அரசு பிரச்சனை செய்தபோது, சீனாவிற்கு தானே விரைந்துசென்று அங்குள்ள அரசுடன் பேசி அந்த வியாபாரிகளை மீட்க உதவினார் மோடி .இந்திய வெளியுறவுத்துறையும் வர்த்தகத்துறையும் செய்ய வேண்டிய வேலை இது .அவர்களை எதிர்பார்த்துக் காத்திராமல் அதிரடியாக அதே சமயம் அமைதியாகச் சென்று காரியத்தை முடித்தார் மோடி .

டாடா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி -குஜராத் மாநிலம் தொழில் செய்வதற்கு ஏற்ற கட்டமைப்பையும் சூழ்நிலையையும் தருவதால் தங்கள் குழுமம் தொடர்ந்து குஜராத்தில் முதலீடு செய்யும் என்கிறார் . ரிலையன்ஸ் குழு தலைவர் அனில் அம்பானி ஒருபடி மேலேபோய் மோடியை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டார்

பாகிஸ்தான் இருந்துகூட 22 பேர் கொண்ட வியாபார்க்குழு இந்த மாநாட்டில் வருகை தந்துள்ளது ,ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது . 2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிர்ரான கலவரங்களை ஆதரித்தவர் மோடி என்றும் காங்கிரஸ் கட்சியும் ,மோடி எதிர்ப்பாளர்களும் இந்தியாவில் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில் ,குஜராத்தில் முதலீடு செய்ய பாகிஸ்தானிய தொழிலதிபர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மோடி – எதிப்பாளர்களுக்கு முகத்தில் விழுந்த அடி என்று சொல்லலாம் . எல்லைப்பகுதியில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பாகிஸ்தானிய குழு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் பாதுகாப்பு பிரச்சனைகளை உதிதேசித்து திரும்பி செல்ல நேர்ந்ததற்கு வருத்தப்பட்டிருக்கிறது .

மோடிக்கு விசா கொடுக்க மறுத்த பிரிட்டன் அரசு அந்த முடிவை மாற்றி கொண்டதுடன் ,பிரிட்டிஷ் அரசு தூதரே மோடியை நேரில் சந்தித்து குஜராத்தின் வளர்ச்சியைப் பாராட்டி மோடியை வாழ்த்திவிட்டுப் போனது இந்தியாவிற்கு வெளியேயும் பல நாடுகள் அதுவும் பிரிட்டன் போன்ற அரசியல் முக்கியத்துவம் உள்ள நாடுகள் மோடியை இந்தியாவின் அடுத்த தலைவராகவே பார்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது .

அடுத்து விவசாய -தொளில்நுட்பத்திற்காக ஒரு சர்வதேச மாநாட்டை குஜராத்தில் நடத்தபோவதாக மோடி அறிவித்திருக்கிறார் . மோடிக்கு கிடைத்த உள்நாட்டு -வெளிநாட்டு அமோக வரவேற்பைப் பார்த்து அரண்டு போயிருக்கிறது காங்கிரஸ் .இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் குஜராத்திற்கு சென்று மோடியை வாழ்த்து வதும் ,தொழில் தொடங்க கியூவில் நிற்பதைப் பொறுக்காத காங்கிரஸ் ,தொழிலதிபர்களை எச்சரித்திருக்கிறது . 1930 ல் ஜெர்மனியில் ஹிட்லருக்கு பின்னாலும் இப்படித்தான் தொழில்துறை அணிவகுத்ததாம் .அதனால் பின்னாளில் உலகிற்கே அபாயம் வந்ததாம் என்று காங்கிரஸ் சார்பில் சொல்பவர் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி .

மோடியைப் பார்த்தாலே வயிற்றை கலக்கும்போது ,என்ன பேசுகிறோம் என்பது காங்கிரஸ்காரர்களுக்கு புரியவில்லை.'உண்மையில் 'தமிழ்நாடு,கர்நாடகா போன்ற மாநிலங்கள் கூட இதைவிட வளர்ச்சி பெற்றிருக்கிறதாம் .கர்நாடகா ,பி .ஜ .பி .ஆளும் மாநிலம் என்பதும் ,தமிழ்நாட்டில் காங்கிரசைத் தீவிரமாக எதிர்க்கும் அ .தி .மு .க ஆட்சி நடைபெறுகிறது என்பதும் கூட மோடிபேரில் உள்ள வயிற்றேரிச்சலில் காங்கிரசுக்கும் மறந்துபோய் விடுகிறது .

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் மத்தியஅரசு,மின்சாரம் வழங்குவதிலும் ,அரசு கேபிகளுக்கு அனுமதி வழங்கும் சின்ன விசயத்திலும்கூட ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது ?மத்திய அரசு தெரிந்தே இப்படிச் செய்கிறது என்றால் அந்த விஷமத்தனத்திற்கு பெயர் தேசத் துரோகமில்லையா ? மஹாராஷ்டிராவில் கூடத்தான் தொழில் வளர்ச்சி கூடியிருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டும் காங்கிரஸ் ,அதே மஹாராஷ்டிராவில் வரிசையாக வெளிவரும் ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் ,நீர்ப்பாசன மொக ஊழல் என இவையும் சேர்ந்தே வளர்ந்து வந்திருப்பதை ஒப்புக்கொள்கிறதா ?

மோடியின் அரசு வளர்ச்சிக்காக அவரை ஹிட்லருடன் ஒப்பிடும் காங்கிரஸ் கட்சிதான் ,இந்த நாட்டில் நெருக்கடி நிலைமையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளையை மிதித்தது .தேவை இல்லாமல் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையில் பங்களாதேஷ்க்கு உதவபோய் பாகிஸ்தானின் நிரந்தரப் பகையாளி ஆனது .பின்னாளில் அதே பங்களாதேஷ் பாகிஸ்தானிடம் உறவு கொண்டாடி இந்தியாவில் தீவிரவாதத்தை வளர்க்க உதவுகிறது .இதுவா அரசியல் சாணக்கியம் ?

சரி ……அமெரிக்காவைப் பார்த்து ஆசைப்பட்டு ,Big Brother ஆக இருக்க நினைத்து இந்திய தோற்றதே என்று வைத்து கொள்வோம்.ஈழத்தமிழர்கள் அப்படியே உல்டா -பல்டி அடித்து இனபடுக்கொலை நடத்த ராஜபக் ஷேவிற்குக் கத்தியைத் தீட்டிக் கொடுத்ததும் இதே காங்கிரஸ் அரசுதானே !

ஹிட்லரை சர்வாதிகாரி என்றும் நாசத்திற்கும் அடிகோலியவர் என்றும் யார் வேண்டுமானாலும் சொல்லட்டும் காங்கிரசைத் தவிர .தனது நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரன் ஹேம்ராஜ் – அவனுடைய தலையை கொய்து சென்ற ,அவமானப்படுத்திய பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்துவது இருக்கட்டும்.அவமானத்திலும் வேதனையலும் புளுவாகத்துடிக்கும் விஷயத்தில் ஹேம்ராஜின் குடும்பத்தை ராணுவத்தலைமையோ உ.பி .மாநில, மத்திய அரசு அமைச்சர்களோ ,போய்ப் பார்த்து ஆறுதல் சொல்ல மனமில்லாத இந்த ஆட்சியாளர்கள் ஹிட்லரைக் காண்பிக்கிறார்கள் – கொடூரனாக .

ஹிட்லர் என்பவன் ஒரு தனியாள் .அவனுடைய கொள்ளைகளிலும் பல நாசத்தை உண்டுபண்ணியது உண்மைதான்.ஆனால் இங்கே மட்டும் என்ன வாழுகிறது ?  நடுவீதியில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்காக போராடிய இளைஞர்களின் மேல் தடியடி தாக்குதல் நடத்திய காருண்ய பிரபுக்கள் ஆளும் அரசுதானே இவர்களுடையது ?. நாட்டின் ஜனாதிபதியுடைய மகன் என்ற திமிரில் பெண்களைக் கேவலமாகப் பேசிய எம் .பி.ன் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் துணியாத பேடித்தனம் ஹிட்லரிசத்தை விட மோசமானது .

தன் அரசியல் எதிரியான கேசுபாய் பட்டேலை தேர்தல் முடிவு வந்த நாளன்றே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்ற மோடியை ஹிட்லருடன் விமர்சனம் செய்வதன் மூலம் ,காங்கிரசும் முதுகெலும்பு சில்லிட்டது முழுதாகப் புரிகிறது . நரேந்திர மோடியின் தலைமையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே .பி சந்திக்க போவதாக தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றது . அவ்வளவுதான் .இனிமேல் காங்கிரசுக்கு வயிற்றுப் போக்கு இன்னும் அதிகமாகும் .அதன் அடையாளமாக மணீஷ் திவாரி ,திக்விஜய் சிங் போன்றவர்களின் வாய்ப்போக்கு – வில்லங்கம் இன்னும் விரிவாகும் .காங்கிரசின் இந்த குலைநடுக்கம் ,2014 -ல் நடக்கப்போவதன் முதல் அறிகுறி !

One response to “காங்கிரசின் ‘மோடி ‘நடுக்கம் !”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...