மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் இடையே புடின் பேசியதாவது:
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் அதிகளவில் சந்தைபடுத்தப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின் பிரபல பிராண்டுகளுக்கு போட்டி போடும் வகையில் இந்த பொருட்கள் உள்ளன. இந்தியாவில், ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை, 2014ல் அறிமுகம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் பல முயற்சிகளால், இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது.
இதனால், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகளவில் நடக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. அதனால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க அவை தயாராக உள்ளன. விரைவில் இந்த முயற்சிகள் துவங்கும்.
தொழில்கள் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை, இந்திய பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |