ஆச்சார்யர் பாரத சைதன்யர்

ஆச்சார்யர் பாரத சைதன்யர் கணிதத்திலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பட்ட மேற்படிப்பு படித்தவர். தனது 21வது வயதிலிருந்து ஆன்மீக வாழ்வில் இறங்கியவர். ஹிமாலயத்தில் ரிஷிகேஷில், ஹாரித்வாரில் மற்றும் காசி, அலகாபாத், அயோத்யா, டெல்லி, மதுரா, ப்ருந்தாவன், நாக்பூர், மற்றும் தமிழ் நாட்டில் பல பகுதிகளில், பல குருநாதர்களுடன் தங்கி, வியாஸர், ஆதி சங்கரர், பதஞ்சலி, வால்மிகி,… போன்றவர்கள் கற்ற வேத-ஆன்மீக உபதேஷங்களைப் பெற்றவர்.

ரிஷிகேஷில் ஆர்ஷ வித்யா பீடம் என்ற நிருவனத்தை நடத்தி வரும் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதிகளிடம் தீஷை பெற்றவர்.

இப்பொழுது சிதம்பரத்தை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வேத-ஆன்மீக உபதேஷங்களை நடத்தி   ரிக், யஜுர், சாம, அதர்வண, வருகிறார். ரிக், யஜுர், சாம, அதர்வண, இந்த நான்கு வேதங்களின் வேத-பூர்வம், வேத-அந்தம் ஆகிய இரண்டு பகுதிகளும் பேசும்- கடவுள், புண்ணிய-பாவம், விதி-மதி முன் பிறவி, மறு பிறவி, ஸ்வர்கம், நரகம், மரணத்திற்குப் பின்,… போன்ற சூஷம ஆன்மீக உண்மைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு குறுகிய கால (48 மணி நேர) வேத பொருளுரைப் பாடத்திட்டம் ஒன்றினை ரிஷிகளின் கல்வி என்று பெயரிட்டுப் புனைந்துள்ளார்.

இது பாரம்பரிய வேத போதனா முறையையும், ஆத்ம ஞானத்தையும், மீண்டும் உயிர்ப்பித்து, ஆத்ம ஞானத்தையும், இறை அருளையும், தேடுவோருக்குத் தேடும் பலனையும் சேர்ப்பிப்பதாக உள்ளது. இந்தக் கல்வி கற்றவர்கள் ஆத்ம ஞானம் என்னும் தன்னைப் பற்றிய அறிவை அடைதல், ப்ரம்ம ஞானம் என்னும் கடவுள் ஞானத்தை அடைதல், கடவுள் தரிசனம், முக்தி என்னும் பிறப்பற்ற நிலையை அடைதல் ஆகிய பலன்களை நிச்சயமாக அடைந்து வருகிறார்கள்.

ஆச்சார்யரது போதனா முறையின் விசேஷம் என்னவென்றால் சன்னியாசிகள், குடும்பஸ்தர்கள், இளைஞர்கள், முதியவர்கள், அனைவரும் சுலபமாக புரிந்து கொண்டு விரும்பும் வகையில் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்து உள்ளார்.

இது ஒருவனை பொருள் வாழ்விலும், அருள் வாழ்விலும் உயர்த்துவதாக உள்ளது – ஒரே நேரத்திலேயே. மேலும், குடும்ப வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று விரோதமானவைகள் அல்ல என்றும், ஆனால் அவைகள் ஒன்றுக்கொன்று நிச்சயமாக உதவக்கூடியவைகள் என்றும் அவர்  கூறுகிறார்.

மேலும் அவர், தன்னை நாடி வந்த சீடர்களின் வாழ்வில் அதை நிரூபித்துக் காட்டியும் வருகிறார். ஆன்மீகத்தில் முன்னேற்றம், பலனை அடைவது என்பது ஒரு பெரிய கடினமான பயணமே கிடையாது, ஏனெனில், ஒருவன் எங்கே எவ்வளவு சுற்றினாலும் அந்தப் பயணம் கடைசியில் அவனிலேயே முடிவதால், அதனால் நேரடியாகவே ஒருவன் தன்னைப் பற்றிய ஞானத்தை அடையப் பயணம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கிறார், நிரூபிக்கிறார்.

அப்படி இவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டு இதுவரை பல ஆயிரம் பேர் இவரிடம் ஞான உபதேஷங்களைப் பெற்று அருள் வாழ்விலும், பொருள் வாழ்விலும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள். மிகத் திறமையாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஞானத்தையும் மோக்ஷத்தையும் கூட அடைந்துள்ளனர். ஆன்மீக பயணம் என்பது நிச்சயமாக கடினமானதாக இருக்க முடியாது, சுகமாகவே இருக்க முடியும், ஏனெனில் யாருக்குமே தான் பிரியாமகவே, சுலபமாக அறியப்பட்டதாகவே இருப்பதால்.

ஆனால், இந்த சில குறிப்பிட்ட “ஆத்ம ஞான” உபதேஷங்கள் இல்லாமலும், ஒரு குறிப்பிட்ட “மனக் கட்டமைப்பு” இல்லாமலும் ஒருவன் ஆஸன, ப்ராணாயாம, ஆத்ம ஞான த்யான,…. பயிற்சிகளின் மூலம் மாத்திரமே ஆன்மீக பயணதில் தொடரும் போது, அது கடினமானதாக ஆகிறது, பலனும் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

உலகில் ஏராளமானவர்கள், ஆன்மீக சாதனைகளில் இருப்பவர்கள் இதற்காக பலப்பல பயிற்சிகளை இப்படி வடிவமைத்துள்ளார்கள். ஆனால் பாரம்பரிய வேத பாரம்பரிய வேத போதனை முறை போதனை முறை மிக சுலபமாகவே வால்மிகி, வியாசர், பதஞ்சலி, விசுவாமித்திரர், ஆதி சங்கரர், திருவள்ளுவர், திருமூலர், விவேகானந்தர்,… போன்று பெயர் தெரிந்த, தெரியாத கோடிக்கணக்கானவர்களை உருவாக்கிக் காட்டி உள்ளது குறைவான முயற்சிகளின் தேவையுடன்.

அப்படி அவரிடம் பயணடைந்த சீடர்கள் அவரது வேத போதனைகளை பரப்ப கோயம்புத்தூரிலும் சென்னையிலும் ரிஷி வித்ய¡¡ பீடம் என்னும் நிறுவனக் கிளைகளை ஏற்படுத்தி உள்ளார்கள். நூற்றுக் கணக்கான இளைஞர்களும், யுவதிகளும், கல்லூரி மாணவர்களும், திருமணமானவர்கள் குடும்பத்துடனும் கூட தொடர்ந்து வந்து பயன் பெற்று வருகிறார்கள்.

தொடர்புகொள்க ; +91 9042500500

http://rishividya.org

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு குவைத்தின் ஆர ...

பிரதமர் மோடிக்கு குவைத்தின் ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற உயரிய விருது இந்தியா - குவைத் இடையேயான உறவுகள், பல்துறைகளில் ஒத்துழைத்து, ...

உலக நன்மைகளை கவனித்தே எந்த ஒரு ...

உலக நன்மைகளை கவனித்தே எந்த ஒரு விஷயத்திலும் முடிவு: ஜெய் சங்கர் ''நாட்டின் நலன் மற்றும் உலக நன்மைகளை கவனித்தே, எந்த ...

பார்லிமென்டை முடக்கினால் வருத ...

பார்லிமென்டை முடக்கினால் வருத்தப்படுவீர்கள் – ஜக்தீப் தன்கர் “பார்லிமென்ட் நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கினால், உங்களை தேர்ந்தெடுத்து எதற்காக ...

மதத்தின் பெயரில் நடக்கும் அட்ட ...

மதத்தின் பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்: மோகன் பகவத் பேச்சு உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...