ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ?

ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? உங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள் ?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

கீதையையே எடுத்துக்கொள்ளுங்கள், அதை படிக்கும் ஒவ்வொரு தனிமனிதரும் தன்னுடைய இயல்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழிமுறைகள் சிறந்தது என்று சொல்வார்கள். சிலருக்கு அறிவுசார்ந்த‌ ஞான யோகம் பிடிக்கும், சிலரோ பக்தியே சிறந்தது  கீதை என்பார்கள். சிலர் குண்டலினி சக்தியை மேலெழுப்பி சஹஸ்ரத்திற்கு கொண்டு சென்று முக்தி அடையும், இராஜ யோகமெ சிறந்தது என்பார்கள், சிலருக்கு சடங்குகளில் அதிகம் லயிக்காமல், நான் வெறும் கருவி, இறைவன் தான் என்னை செய்ய வைக்கின்றான் என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் செயலாற்றும் கர்ம யோகம் பிடிக்கும். ஆக கீதையிலேயே பல வழிகளை இறைவன் தந்திருக்கிறான்.

யோகம் என்றால் இனைவது. ஒரு ஜீவன் என்கிற ஜீவாத்மாவை, இறைவன் என்கிற பரமாத்மாவிடம் எது இனைக்கிறதோ அது யோகம். ஆக இனைவதுதான் இங்கு முக்கியம், எப்படி இனைகிறாய் என்பதல்ல. எப்படி இனைய வேண்டும் என்பது பயனம் செய்பவனின் விருப்பத்தை பொறுத்து இருக்கிறது. நாம் சுற்று வழியிலும் செல்லலாம், நேர் வழியிலும் செல்லலாம். எது சுற்று வழி, எது நேர் வழி என்பதை நம் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ளலாம், நல்ல குருவின் துனைக்கொண்டும் தெளிந்துக் கொள்ளலாம்.

ரிக் வேதம் சொல்கிறது "ஏகம் சத், விப்ர பஹுதா வதண்தி", இறைவன் ஒருவன் தான் ஆனால் பல என்று சொல்கிறார்கள் என்கிறது. உபநிடதமும் "பசுக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் அது தரும் பாலின் நிறம் வெள்ளையாக இருப்பதை போல், இறைவன் பலவிதங்களில் காட்சி தந்தாலும் அவன் ஒருவன் தான்" என்கிறது.

கீதையில் கிருஷ்ணனும் "யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்". இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம்,

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

"அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை, அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை, அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை, அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே" என்று

அதாவது இறைவனை இதுதான் என்று சொல்லிவிட முடியாது, இவ்வளவுதான் என்று அளந்து விட‌ முடியாது, வார்தைகளால் முழுவதுமாய் விளக்கிவிட முடியாது அவனை உணரத்தான் முடியும் என்கிறார்.

இதையே நம்மாழ்வார், திருவாய்மொழியில் சொல்கிறார்,

"உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே"

இருக்கிறான் என்பவற்கு, அவன் அனைத்துமாய் இருக்கிறான்.
அவன் இல்லை என்பருக்கு அருவமான சூட்சும சரீரத்தில் இருக்கிறான்
இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த இறைவன் இருப்பதால், என்றும், எங்கும் வியாபித்து இருக்கும் நிலை கொண்டவன் அவனே !

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.

இறைவனுக்கு இனை வைத்து, அவன் கோபத்துக்கு ஆளாகி, நரக நெருப்பில் பொசுங்கும், மனநோயாளிகள் கதைகள் இங்கு இல்லை

Thanks; Enlightened Master

One response to “ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ?”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...