குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 28- வந்து விட்டாலே போதும்.. என்ஜிஓக்களின் கோஷம் காதை பிளக்கும்.. இந்நிலையில் இவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அரசுக்கு குல்பெர்க் சொசைட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சமூகவியலாளர் கிஷோர் திரிவேதி எழுதியிருக்கும் கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது , வருடம் தோறும் பிப்ரவரி 28ந் தேதி குஜராத்தில் எதிர் பாராத விதமாக நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலிசெலுத்திருக்கிறோம் என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்) அகமதாபாத்தில் குவிந்துவிடுகின்றன.
இந்த தன்னார்வ நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என குல்பெர்க் சொசைட்டியினர் அகமதாபாத் போலீஸ்கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் . பல தன்னார்வ நிறுவனங்கள் குஜராத்கலவரத்தை முன்வைத்து வெளிநாட்டிலிருந்து நிதிசேகரித்து வருகின்றன. அண்மையில் மத்திய திட்டக்குழு உறுப்பினர் சயீதாஹமீத் தமது வீட்டையே என்ஜிஓ ஒன்றுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்திருப்பதை பாஜக தேசிய துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்பி.யுமான பர்ஷோத்தம் ரூபலா அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்த என்ஜிஓவை நடத்தி வருபவர் ஷப்னாஹாஸ்மி. இதே போல் டீஸ்டாஸ்டல்வாட் என்ற மற்றொரு என்ஜிஓ. நிர்வாகி எப்படி தேசவிரோத மனோ பாவம் கொண்டவர் என்பதையும் அவருடன் இருந்தவரே அம்பலப்படுத்தி யிருக்கிறார். அவர் எப்பொழுதும் குஜராத்அரசுக்கு எதிராகத்தான் பேசக்கூடியவர்.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரையில் கடந்த 3 சட்ட சபை தேர்தல்களிலும் பாஜக தான் வென்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ளாட்சிதேர்தலில் பல இஸ்லாமியர்கள் பா.ஜ.க.,வில் இணைந்து வெற்றியும்பெற்றிருக்கின்றனர். ஆனால் இந்த என்ஜிஓக்கள்தான் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றன என அவர் குறைகூறியுள்ளார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.