தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்தஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இருமாநில பொறுப்புகளை ஒருசேர கவனித்து வரும் தமிழிசை இருமாநிலங்களிலும் குடியரசுதின விழாலும் தேசிய கொடியை ஏற்றுவார் என்ற தகவல் வலம்வந்தது.
மேலும், இரண்டு மாநிலங்களிலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, புதுச்சேரியில் முதல்மந்திரி ரங்கசாமி தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி நராயணசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், தெலுங்கானாவில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு விமானம் மூலம் புதுச்சேரிக்குவந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கடற்கரைசாலை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு விருதுகளையும் வழங்குகினார். விழாவில் முதல்-மந்திரி ரங்கசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |