பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் நரேந்திரமோடியை புகழ்ந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் குஜராத்தின் முன்னேற்றத்துக்கு மட்டும் நரேந்திரமோடி பாடுபடவில்லை. கட்சி வளர்ச்சிக்கும் அவர் தூண்போன்றவர் என பாராட்டினார்.
அதே போன்று பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்க்கும் புகழாரம் சூட்டினார். வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பாராட்டுமழை பொழிந்தார்.
அத்வானி பேசுகையில், எனக்குமுன் பேசிய சுஷ்மா கூறியதைவிட சிறப்பாக வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. அவர் எல்லா வற்றையும் சரளமாக விளக்கினார். சிலமாநிலங்களில் ஏன் தோற்றோம் என்பதை அருமையாக ஆய்வுசெய்தார்.
வாஜ்பாயின் சொற்பொழிவை கேட்கமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்துவந்தது. ஆனால், சுஷ்மா சுவராஜ், வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்றுஇருக்கிறார். வாஜ்பாய் உரையை கேட்கும் போது எனக்கு ஏற்படும் அதேமனநிலை, சுஷ்மா உரையை கேட்கும் போதும் ஏற்பட்டது. என்று அவர் கூறினார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.