சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற மகரசங்கரமபூஜை, தொடர்ந்து திருவாபரணம் சார்த்தி தீபாராதனை, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மகரவிளக்கு தினமான இன்று உச்சபூஜை முடிந்து பகல்
இரண்டு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் சன்னிதானம் மற்றும் மாளிகைப்புறம் கோயில்கள் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி சசிநம்பூதி நடைதிறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு திருவாபரண பவனியை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரரசிக்கு கடக்கும் வேளையில் ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க மகரசங்கரமபூஜை இன்று மாலை 6.44 மணிக்கு நடைபெற்றது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து வந்த முத்திரை தேங்காய்களை உடைத்த தந்திரி நெய்யை பகவானின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிராசதம் கொடுத்தார்.
இந்த பூஜை முடிந்த சிறிது நேரத்தில் திருவாபரணங்கள் சன்னிதானம் வந்து சேர்ந்தது. திருவாவபரணத்தை பெற்றுக்கொண்ட தந்திரியும், மேல்சாந்தியும் கோயில் நடை அடைத்து ஆபரணங்களை அணிவித்தனர். பின்னர் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்ததும் இரவு மணிக்கு 7.06 மணிக்கு முதன் முறையாக ஜோதி தெரிந்தது. தொடர்ந்து சில வினாடிகள் இடைவெளியில் அடுத்த இரண்டு முறை ஜோதி காட்சியளித்தது. இந்த நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் குழுமியிருந்தனர். ஜோதி தரிசனம் நடத்திய பக்தர்கள் ஆனந்த களிப்புடன் மலை இறங்கினர்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.