வியத்தகு ஆசிரியர் ; சிந்திக்க வைக்கும் புத்தகம்

 வியத்தகு ஆசிரியர் ; சிந்திக்க வைக்கும் புத்தகம் போன மாதம் " குஷ்வந்த்நாமா: என் வாழ்க்கைப் பாடங்கள் " என்ற புத்தகம் எனக்கு வந்தது. குஷ்வந்த் சிங்க் எழுதி, பெங்குவின் வைகிங்க் பதிப்பித்திருக்கிற அந்த 188 பக்கப் புத்தகத்தை கிட்டத்தட்ட ஒரே மூச்சில் படித்து முடித்தேன். படித்தபின் நான் செய்த முதல் வேலை எனது அலுவலகம் மூலம் குஷ்வந்த் சிங் அவர்களோடு தொடர்பு கொண்டதுதான்.

இப்படிப்பட்ட அற்புதமான புத்தகத்தை எழுதியதற்கு , அவருக்கு உடனேயே என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும் வணக்கங்கங்களையும் சொல்ல் விழைந்தேன்.

அவருடைய முனையிலிருந்து தொலைபேசியில் பேசியவர் குஷ்வந்த் சிங் தொலைபேசி அருகில் வர இயலாது; திரு அத்வானி அவரோடு பேச விரும்பினால் அன்று மாலை அவரது இல்லத்திற்கு வரலாம் என்றார். நான் உடனே அன்று மாலை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதால் , மறுநாள் கண்டிப்பாக அவரச் சந்திக்க வருகிறேன் என்றேன்.
குஸ்க்வந்த் சிங் 1915 ம் வர்ய்டம் ,பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் பிறந்தவர். இப்புத்த்கம் எனக்குக் கிடைத்த சமயம் பிப்ரவரி 2013. அவர் 98 முடிந்து தனது 99-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த முதிர்ந்த வயதில் இப்படி சரளமாகவும் மற்றவரைக் கவரும் வகையிலும் எழுதக்கூடிய இன்னொரு ஆசிரியர் இருக்கிறரா என்பது எனக்கு சந்தேகமே! அதனால், நான் இந்த வலைப்பூக் கட்டுரைக்குக் கொடுத்துள்ள தலைப்பு , புத்தகத்தை உயர்த்தி மட்டுமல்ல அதை எழுதிய ஆசிரியரையும் குறிப்பாக பராட்டுவதகவும் அமைகிறது.

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் " என்ற ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள ஹாம்லெட் நாடகத்தின் அங்கம் 1 காட்சி 3 –ல் உள்ள மேற்கோளுடன்(This above all, to thine own self be true, And it must follow,  குஷ்வந்த்நாமா as the night the day, Thou canst not then be false to any man.)ஆரம்பிக்கிறது.

இப் புத்தகம் குஷ்வந்த் சிங்கின் உண்மைத்தன்மைக்கு ஒரு மிகச் சிறந்த சாட்சி என்றே கூறுவேன். ஏனெனில், அவர் தனக்குத்தானே உண்மையாக இருக்க மிகவும் முயன்றிருக்கிறர் என்பது தெரிகிறது. தன்னைப் பற்றிகுறிப்பிடும்போதுகூட அவர் மிகவும் வெளிப்படௌயாக இருக்கிறார்,. அவருடைய முன்னுரையின் முதல் இரு பாராக்களைப் படியுங்கள் , நான் சொல்வது புரியும்.

"இந்து மத நம்பிக்கைகளின்படி நான் இப்போது வாழ்க்கையின் நான்காவதும் இறுதியுமான
ஸந்யாசம் என்னும் கட்டத்தில் தியனத்தில் இருந்துகொண்டிருக்க வேண்டும். .எல்லா உலக பந்தங்களையும் துறந்து எல்லாவற்றிலும் பற்றில்லாமல் இருக வேண்டும். எவனொருவன் தனது தொண்ணூறாவது வயதை எட்டுகிறனோ அவன் பலஹீனமாக இருப்பான்; தனது பலஹீனத்துக்கு என்ன காரணம் என்று அறியாமல், சதா படுத்தபடியே இருப்பான் " என்று குரு நானக் சொல்கிறர் நான் அந்த இரு நிலைகளில் எதையும் இன்னும் எட்டவில்லை "

" தொண்ணூற்று எட்டு வயதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே எண்ணுகிறேன் . நான் இன்னும் என்னுடைய மாலை ஏழு மணி விஸ்கியை விரும்புகிறேன்; சுவையான விருந்து உண்கிறேன்; அதைவிட சுவையான கிசுகிசுக்களையும் வம்பையும் கேட்பதில் ஆர்வமாயிருக்கிறேன்; என்னைப் பர்க்க வருபவர்களிடம் , "'; மற்றவரைப் பற்றி நல்லதாகச் சொல்லப் போவதில்லையென்றால் தாராளமாக என் பக்கத்தில் வந்து அமருங்கள் ' என்று சொல்கிறேன். என்னைச் சுற்றியுள்ள உலகத்தில் என்ன நடக்கிறதென்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறேன். கவிதையை ரசிக்கிறேன் ; கவிதையான அழகான பெண்கள் மத்தியில் இருக்க பிரியப்படுகிறேன். ; இயற்கையை நேசிக்கிறேன். "

முன்னுரையைத் தவிர புத்தகத்தில் 16 அத்தியாயங்கள் இருக்கின்றன. .முன்னாள் பத்திரிகையாளன் என்ற முறையில் அவற்றில் மூன்றை நான் மிகவும் ரசித்தேன். அவை :
(1) எழுதுவது என்றல் என்ன?( The Business of Writing)
(2) ஓர் எழுத்தாளனவாது எப்படி? ( Whai it takes to be a Writer?)
(3) ஊடகவியல் – அன்றும் இன்றும்
.
 குஷ்வந்த் சிங்க்" சாவைப் பற்றி " என்னும் அத்தியயத்தில் ஆசிரியர்,
"சாவு என்பதை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்கிற சமண மதக் கொள்கையை உண்மையில் நான் ஆதரிக்கிறேன். 1943-ல் என்னுடைய இருபதுகளில் இருக்கும்போதே நான் என்னுடைய இரங்கலை  எழுதியிருக்கிறேன். அது பின்னாளில் " இறப்புக்குப் பின்"(Posthumous)) என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பில்கூட இடம் பெற்றது.
*
 
அதில், 'ட்ரிப்யூன்' பத்திரிகை, முகப்புப் பக்கத்தில், ஒரு சிறு புகைப்படத்தோடு என்னுடைய இறப்பை அறிவித்திருந்ததைப் போல நான் கற்பனை செய்தேன். தலைப்பில், " சர்தார் குஷ்வந்த் சிங் மறைவு " என்று இருப்பது போலவும் , அதன் கீழ் சற்றுச் சிறிய எழுத்தில் 'ஒரு இளம் மனைவியையும், இரு குழந்தைகளையும், மற்றும் பல ரசிகர்களையும் நண்பர்களையும் தவிக்க விட்டு, நேற்று மாலை ஆறு மணியளவில், சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார். மறைந்த சர்தார் வீட்டிற்கு வந்தவர்களுள், தலைமை நீதிபதியின் உதவியாளர், மந்திரிகள், மற்றும் உயர்நீதி மற்ற நீதிபதிகள். ," என்று எழுதியிருப்பதைப் போலவும் நான் கற்பனை செய்தேன். "

இறுதிக்கு முன் அத்தியாயத்தின் தலைப்பு " நீண்ட வாழ்விற்கும் மகிழ்வுக்கும் 12 குறிப்புகள் ' ( 12 Tips to Live Long and Be Happy") என் மகள் பிரதிபா, " அப்பா, இப்புத்த்கத்தைப் படிக்காமலே குஷ்வந்த் சிங் இதில் கொடுத்துள்ள குறிப்புகளை பெரும்பாலும் நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள் போலிருக்கிறதே. அவற்றில் இரண்டு மிக முக்கியமானவை : (1) ஆறுவது சினம் (2) பொய்யுரைக்காதே . இவையிரண்டையும் நீங்கள் தானாகவே செய்கிறீர்களே" என்பாள்.

புத்த்கத்தின் இறுதி அத்தியாயம் " சமாதி" Epitaph) எனக்குப் பின் மக்கள் என்னை எவ்வாறு நினைவு கொள்ள வேண்டும் ?. மக்களைப் புன்முறுவல் கொள்ளச் செய்தவன் என்றே என்னை எல்லோரும் நினைக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன் நான் என்னுடைய கல்லறை எழுத்தை எழுதினேன் "இதோ இங்கு உறங்குபவன் மனிதனையும் கடவுளையும் சும்மா விடவில்லை.:அவனுக்காக உங்கள் கண்ணீரை வீணக்காதீர்; அவதூறாகவும் கேலியாகவும் எழுதிக் கொண்டிருப்பதை ஒரு பெரிய விஷயம் என்று நினைத்த ஒரு வெற்று மனிதன் ; பொறுப்பில்லாத இவன் மறைந்ததற்கு கடவுளுக்கு நன்றி ("Here lies one who spared neither man nor Go; Waste not your tears on him, he was a sod;Writing nasty things he regarded as great fun;Thank the Lord he is
dead, this son of a gun. -Khushwant Singh)

மார்ச்3 2013 ஞாயிறன்று மாலை , தில்லியில், ஸுஜன் சிங் பார்க் என்று அவரின் தந்தையார் பெயரிடப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் நான் சர்தார் குஷ்வந்த் சிங்கைச் சந்தித்தேன். அவருகு என்னுடைய வணக்கங்களைக் கூறி, அவரது புத்த்கத்திற்காக அவரை மனமுவந்து பாராட்டினேன். ஒரு கோப்பை தேனீர் அளித்தார் . ஒரு மணி நேரம் அவரோடு இன்பமாகக் கழிந்தது. அடுத்த வீட்டில் வசிக்கும் அவரது மகள் மாலாவையும் சந்தித்ட்யேன். அவர்தான் தனது தந்தையாரை நன்கு கவனித்துக் கொள்கிறார். .

***
முடிக்கு முன் …

டெக்ஸச் மருத்துவமனையில் ஜனாதிபதி ஜெயில் சிங் அவர்களுக்கு அறுவை சிகிச்சை. அதே மருத்துவமனையில்தான் அவருக்கு முந்தைய ஜனாதிபதி சஞ்சீவ ரெட்டிக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போனபோது, தலைமைஅறுவை நிபுணர் , " நீங்கள் ரெடியா? " என்று ஜெயில் சிங்கிடம் கேட்டார்.  அதாவது தயாரா என்பதை ஆங்கிலத்தில் கேட்டார். ஜெயில் சிங்க், " இல்லை, நான் ஜெயில் சிங்க் " என்று பதிலளித்தர் !

" குறும்பு ஒரு ஆபத்தான ஆயுதம் ""(Humour is a lethal weapon".) என்னும் அத்தியாயம்

நன்றி ; எல்.கே. அத்வானி

நன்றி; தமிழில் வி.ராஜகோபாலன்

One response to “வியத்தகு ஆசிரியர் ; சிந்திக்க வைக்கும் புத்தகம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...