ஓட்டுச் செல்லங்களுக்கு விரைவு நீதி??!!

 ஓட்டுச் செல்லங்களுக்கு விரைவு நீதி "எங்கே குண்டு வெடித்தாலும் இசுலாமியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் நிரபராதிகள். ஆகவே அவர்களுக்கு நீதி வழங்க சிறப்பு நீதிமன்றங்கள்

அமைத்து விரைவாக நீதி வழங்க வேண்டும். அவர்களுக்கு அரசு தகுந்த அளவில் நஷ்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்." இந்தக் கோரிக்கை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தால் சிறுபான்மை நல அமைச்சர் ரகுமான் கானிடம் வைக்கப்பட்டு அவர் மூலமாக உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளது.

உள்துறை இந்தக் கோரிக்கையை மிகுந்த பரிவுடன் பரிசீலித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. "இளைஞர்கள் 10 முதல் 14 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டு பின்னர்
நீதிமன்றங்களால் சாட்சியில்லை ஆதாரமில்லை என்று விடுவிக்கப்படுகிறார்கள். இது அநீதி." என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் "அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் காரணமாகச் சிறையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும்" என்று சில காலமாகவே தெரிவித்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் 400 முஸ்லிம் இளைஞர்கள் அகிலேஷ் யாதவ் முதல்வர் பதவி ஏற்றபின் விடுவிக்கப்பட்டார்கள்.

சமீபத்திய ஐதராபாத் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முத்தியுர் ரகுமான் சித்திகி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி அய்ஜாஸ் அகமது மிர்சா ஆகியோர் தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) தக்க நேரத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். ஆகவே இவர்களது கைது தவறானது என்று முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் கூறியுள்ளது.

இது போன்ற கைதுகளையும் விடுதலைகளையும் கையாள சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சிறுபான்மையினர் நல அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகைய சிறப்பு நீதிமன்றங்களில் விரைவாக விசாரிக்கப்படும் வழக்குகளில் கைதானவர் மீது குற்றமில்லை என்று தீர்ப்பானால் அவரைக் கைது செய்த காவல்துறை அதிகாரி மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது பொய் வழக்குப் போட்டு அப்பாவிகளைச் சிறைவைக்கும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று ஷிண்டே கூறியுள்ளார்.

  இவ்வாறு பாதிக்கப்பட்டு நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படும் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உள்துறை அமைச்சர் ஷிண்டே, "வழக்கமாக நீதிமன்றங்களே ஓவ்வொரு வழக்கிலும் நஷ்ட ஈடு குறித்துத் தீர்ப்பளிக்கும். இத்தகைய வழக்குகளில் ஓவ்வொரு தனிப்பட்ட வழக்கையும் ஆராய்ந்து நஷ்ட ஈடு குறித்து முடிவெடுக்கப்படும். குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வழக்கில் போதிய ஆதாரமின்மை அல்லது முறையான விசாரணையின்மை ஆகிய காரணங்களாலும் நிகழலாம் என்பதால் நீதிமன்றங்களின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு, கைது விசாரணை ஆகியவை மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் சிறுபான்மையினர் நலத்தினைக் கருதி அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மாநில அரசை வற்புறுத்தும் என்றும் ஷிண்டே தெரிவித்தார்.

இப்படி ஒரு சட்டம் வந்தால் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளைக் கைது செய்வதைவிட தம் மீது குற்றம் வராதிருக்கவே அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள். குற்றம் . நிரூபிக்கப்படாதிருக்க பல காரணிகள் இருக்கின்றன. சட்டச்சிக்கல்கள் காரணமாகவும் பல குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் கைது செய்த அதிகாரிகள் மீது விசாரணை வரும் எனும் நிலையில் அதிகாரிகள் மிகவும் கவனமாகத் தம் மீது குற்றம் ஏதும் வராதிருக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். இது குற்றம் புரிபவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் செயல். சிறுபான்மையினர் நலன் என்ற போர்வையில் குற்றவாளிகளை வளர்த்துவிடும் செயல்பாடு இது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரகுமான்கான்

குற்றம் புரிபவர்கள் இசுலாமிய மதத்தவர்கள் என்றால் அவர்கள் மீது கனிவுடன் விசாரணை நடக்கும். அவர்கள் செய்யும் குற்றங்கள் மிகவும் விரைவாக போதிய அவகாசமின்றி காவல்துறைக்குத் தக்க சுதந்திரமின்றி விசாரிக்கப்படும் என்பது தீவிரவாத வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு முயற்சி. இசுலாமியர் ஓட்டுக்காக தேசநலனை அடகு வைப்பதா என்ற கேள்விக்கு "தேச நலன் முக்கியம் என்றாலும் அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது" என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரகுமான்கான் கூறியுள்ளார்.

எந்த நீதிமன்றத்திலும் குற்றத்தின் சாயலே இல்லை என்று தெளிவாகச் சொல்லப்பட்ட பிறகும் நரேந்திர மோடி மீது சேறு வாரித்தூற்றும் மதசார்பின்மை பிராண்ட அரசியல்வாதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஆனால் இந்துக்கள் விழித்தெழுந்து கேட்க வேண்டிய கேள்வி "சாத்வி ப்ரக்ஞா" என்ற இந்துத் துறவியை உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் சிறையில் வைத்து வாட்டுவது என்ன நீதி?

இந்து என்றால் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் காலகாலமாகச் சிறையில் வைத்தும் குற்றவாளி என்று ஊடகங்களில் தீர்ப்பெழுதியும் கூவிக்கூவி மதசார்பின்மை வியாபாரம் செய்கிறார்களே? இசுலாமியர் ஒட்டு மொத்தமாக ஓட்டுப் போடுவார்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் தீவிரவாத வழக்குகளையும் நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் நடவடிக்கை வருகிறதே?

இந்த ஓட்டுப் பிச்சைக்காரர்களால் தேசம் முற்றிலும் சீரழிவதற்குள் இந்து மக்கள் விழித்தெழுந்து தம் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும்.

வந்தே மாதரம்.

நன்றி;- ஓட்டக்காரத் தேவன், இளந்திரைகொண்டான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...