லண்டன் சதி வழக்கு – 5

 மதன்லால் திங்காரா தூக்கிலிடுவதற்கு முந்தின நாளன்று பிரிட்டிஸ் அரசாங்க நாளேடான "டெய்லி நியூஸ்" பத்திரிகையில் திங்காராவின் சவால் என்ற அறிக்கை ஒன்று வெளியே வந்தது,அந்த அறிக்கை பிரிட்டிஸ் பேயரசை நிலை குலைய செய்தது, இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீரகாவியமான அந்த அறிக்கை இதோ,

"கர்ஸான் வில்லியை சுட்டுக்கொன்று ஆங்கில மண்ணில் ஆங்கில ரத்தத்தினை சொட்ட வைத்தேன் என்பதினை நான் ஒப்புக்கொள்கிறேன்.

நான்காண்டுகளுக்கு முன்னர் எங்கள் தங்க வங்கத்தினை இரண்டாக பிரித்த சண்டாளன் கர்ஸான் வில்லி. அவனுக்கு பாடம் புகட்ட இப்போதுதான் தகுந்த வாய்ப்பு கிட்டியது. இந்த முயற்சியில் நான் எவரோடும் கலந்து ஆலோசிக்கவில்லை.

ஓர் இந்து என்ற முறையில் என் தேசத்திற்கு இழைக்கப்படும் அவமானம் கடவுளுக்கே இழைக்கப்படும் அவமானமாக நான் கருதுகிறேன்.

என் தேச காரியம் ஸ்ரீ ராமனின் காரியம். என் தேச சேவை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கே செய்யும் சேவை ஆகும்.என் தேச சேவை ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிற்கே செய்யும்  சேவை. அறிவிலும், செல்வத்திலும் வரியவனான என் போன்ற ஏழை மகன், என் தேசத்தாய்க்கு கொடுக்க என்ன இருக்கிறது,? ஏதும் இல்லாத போது அவளது சந்நிதானத்தில் என் சொந்த ரத்தத்தினையே காணிக்கையாகப் படைப்பதுதானே சிறந்த சமர்ப்பணம்? நானும் அதைத்தான் செய்தேன்..

பாரத மக்களுக்கு இன்று தேவையான ஒரே பாடம் எப்படி சாவது என்று கற்றுக்கொள்வதுதான்! அதனை போதிக்க ஒரே வழி நாமே செத்து மடிவதுதான். இன்றுள்ள ஆண்டான் அடிமை என்ற நிலை ஒழிகின்ற வரை இந்த யுத்தம் தொடரும். யுத்தத்தில் செத்து மடிந்தால் வீரசுவர்க்கம் கிடைக்கும், வென்றால் நமது பூமி திரும்பக் கிடைக்கும்!

நான் கடவுளிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனை இதுதான்: நான் மீண்டும் பிறந்தால் என் பாரத அன்னைக்கே மகனாக பிறக்க வேண்டும்: அப்போதும் அவள் அடிமையாக இருந்தால் நான் மீண்டும் இதே புனித காரணத்திற்காகவே போரிட்டு மடிய வேண்டும்.! மனிதகுல நன்மைக்காகவும், ஹிந்துமதம் நிலைத்து நிற்கவும் என் தாயகம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும்.

வந்தேமாதரம்.""

1909 ஆகஸ்ட் 9 அதிகாலையில் சூரியன் உதயமாகும் முன்பே, மதன்லால் திங்காரா தூக்கிலிடப்பட்டான்.

எங்கோ பிறந்த அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன் ஆகியோரின் வரலாற்றினை போதிக்கும் காங்கிரஸ் அரசாங்கம், அபிமன்யுவிற்கு நிகரான மதன்லால் திங்காரா போன்ற மாவீரர்களின் உண்மையான வீரவரலாற்றினை குழி தோண்டி புதைத்து விட்டது,

இந்த நாசக்கார காங்கிரஸ் இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

(முடிந்தது)

வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...