காங்கிரஸ் கட்சியில் தான் வேட்பாளர்களை அறிவிப்பதில் போராட்டமே நடக்கிறது

 காங்கிரஸ் கட்சியில் தான் வேட்பாளர்களை அறிவிப்பதில்  போராட்டமே  நடக்கிறது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் , மீதமுள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஏப்ரல் 15ஆம்தேதிக்குள் வெளியிடப்படும் என பாஜக தேசிய துணைதலைவர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் பா.ஜ.க சார்பில் 175 இடங்களுக்கான வேட்பாளர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் இடங்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் அறிவிக்க படுவார்கள் என சதானந்தகவுடா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் தேர்தலில் ‘சீட்கேட்டு வருவார்கள் என பா.ஜ.க காத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளார்கள் . வேட்பாளர்பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியில்தான் வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் உருவாகி போராட்டம் நடந்துவருகிறது.

வரும் 15–ந் தேதிக்குள் மீதமுள்ள பா.ஜ.க வேட்பாளர்பட்டியல் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சட்ட சபை தேர்தலில் பா.ஜ., கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி, பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் நடிகை ஹேமமாலினி, ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர் என்று
சதானந்த கவுடா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...