இந்தியாவில் எந்த‌க்கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌ கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா?

1897-ஆம் வருடம் பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதிவரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் சென்னையிலிருக்கும் ஐஸ்ஹவுஸ் (தற்போது விவேகானந்தர் இல்லம்) கட்டிடத்தில் தங்கியிருந்தார். அவர் சென்னையில் அப்போது ஆற்றிய சொற்பொழிவுகளில் ஒன்று …

 

சென்னையில் நடந்த ஒரு சொற்ப் பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரை யாற்றுகிறார் "சிறுவர்களே, மீசை முளைத்த குழந்தைகளே, சென்னையை தாண்டிச்செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்துநின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம் பரியத்தையுடைய 30 கோடி மக்களின் (அந்தக் காலத்தில்) முதுகில் பின்னால் நின்று கொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்றவேண்டிய சட்டங்களை கட்டளையிடுகிறீர்கள். உங்களுக்கு இது வெட்கமாக இல்லை. அத்தகைய தெய்வநிந்தனையிலிருந்து விலகிநில்லுங்கள். நீங்கள் படிக்கவேண்டிய பாடத்தை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சிலவரிகளை எழுதி அதை வெளியிட சிலமுட்டள்களை கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்தஉலகத்தின் கல்விகற்றவர்கள் என நினைத்து கொண்டீர்களா? நீங்கள்தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என நினைக்கின்றீர்களா?

நீங்க‌ள்தான் இந்தியாவின் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் என்று நினைத்துக்கொண்டீர்க‌ளா? இந்தியாவில் எந்த‌க்கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌ கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா? இந்தியாவின் வ‌ர‌லாற்றை நீங்கள் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? ச‌ங்க‌ர‌ர்யார்? ராமானுஜ‌ர் யார்? நான‌க்யார்? சைத‌ன்ய‌ர் யார்? தாது யார்? க‌பீர் யார்? ஒளி மிகுந்த‌ ந‌ட்ச‌த்திர‌ கூட்ட‌ங்க‌ளின் வ‌ரிசைக‌ள்போல் ஒருவ‌ர் பின்னால் ஒருவ‌ராக‌ வ‌ந்த‌ இந்த‌ம‌க‌த்தான ஆச்சாரிய‌ர்க‌ள் எல்லாம் யார்?

ராமானுஜ‌ர் தாழ்ந்த‌ குல‌த்த‌வ‌ர்க‌ளுக்காக‌ வேத‌னை ப‌ட‌வில்லையா? த‌ன் வாழ்நாள்முழுவ‌தும் கீழ்சாதியினரை கூட‌ வைண‌வ‌ ச‌ம‌ய‌த்தில் அனும‌திக்க‌ பாடுப‌ட‌வில்லையா? தனது ச‌ம‌ய‌த்தில் முக‌ம‌திய‌ர்க‌ளை சேர்த்துக்கொள்ள‌ அவ‌ர் முயற்ச்சி செய்யவில்லையா? இந்துக்க‌ளோடும் முக‌ம‌திய‌ர் க‌ளோடும் உற‌வாடி ஒரு புதிய‌நிலையை கொண்டுவ‌ர‌ நான‌க் முய‌ல‌ வில்லையா? அவ‌ர்க‌ள் எல்லாம் முய‌ன்றார்க‌ள் அவர்களது ப‌ணி இன்னும் ந‌ட‌ந்துகொண்டே தானிருக்கிற‌து. வித்தியாச‌ம் இதுதான்.

அவ‌ர்க‌ள் இன்றைய‌ சீர்திருத்த‌ கார‌ர்க‌ளை போன்று எக்காளமிட‌வில்லை. இன்றைய‌ சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளின்வாய்க‌ளில் சாப‌மே இல்லை. யாரையும் அவர்கள் இழிவு படுத்தி பேசியதில்லை.

அவ‌ர்க‌ளுடைய‌ உத‌டுக‌ள் வாழ்த்துக்க‌ளைம‌ட்டுமே கூறின‌. அவ‌ர்க‌ள் எந்த‌க்கால‌த்திலும் நிந்திக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் "இந்துக்க‌ளே, நீங்க‌ள் இது வ‌ரை செய்த‌வை எல்லாம் ந‌ல்ல‌தே. ஆனால் என் ச‌கோத‌ர‌ர்க‌ளே, அதைவிட‌ ந‌ல்ல‌தை நாம்செய்வோம்" என்றே கூறின‌ர். இன்றைய‌ சீர்திருத்த‌ கார‌ர்க‌ளைப் போல் "நீங்க‌ள் எல்லாம் கெட்டுப்போன‌வ‌ர்க‌ள். இப்போது நாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ முய‌ற்சிப்போம்" என சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர் க‌ளாக‌ இருந்தீர்க‌ள். இப்போது மேலும் ந‌ல்ல‌வ‌ர் க‌ளாவோம்" என்றே கூறினார்க‌ள். இது தான் இர‌ண்டு பேரிடையே அமைந்துள்ள‌ மிக‌ப்பெரிய‌ வித்தியாச‌ம்." என்றார் சுவாமி விவேகான‌ந்த‌ர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...