காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், இலங்கை தமிழர் போராட்டமும் ஒன்றே என்று சீமானின் புதிய தோழன் , லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத்தின் உற்ற தோழன் யாசின் மாலிக் திருவாய் மலர்ந்துள்ளான். இலங்கை தமிழர் பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனையுடன் இணைத்து இழிவுபடுத்தியுள்ளான்.
கடலூரில் நாம்தமிழர் கட்சியினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தின பொதுக்கூட்ட பேரணி நடத்த ஏற்பாடுசெய்திருந்தனர். இருப்பினும் இதில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியதற்காக பொதுக் கூட்டத்துக்கும் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவுசெய்தனர்.
இதில் இறந்ததாக கூறப்படும் தடை செய்யப்பட்ட இயக்க தலைவரின் படத்தைப் பயன்படுத்தியதற்காக பொதுக் கூட்டத்தை தடை செய்தது வினோதம் என்றால். வருடம் வருடம் பலநூறு இந்தியர்களை குண்டு வைத்து கொலைசெய்யும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் உற்ற நண்பன் யாசின் மாலிக்கை பேச அனுமதித்தது அதைவிட வினோதமாகத் தெரிகிறது .
இலங்கை பிரச்சனையின் அடிச்சுவடே தெரியாத யாசின் மாலிக்கோ தன்பங்குக்கு இலங்கை பிரச்னையும் காஷ்மீர் பிரச்னையும் ஒன்றே என்று வாந்தி எடுத்துள்ளார். யார் இந்த யாசின் மாலிக்?, காஷ்மீர் விடுதலை எனும் பெயரில் பல்லாயிரகணக்கான காஷ்மீரின் பூர்விக குடிகளான காஷ்மீர் ஹிந்துகளை இந்திய அரசின் ஏஜென்ட் என்று சொன்னவர், அவர்களை மதத்தின் பெயரால் கொலைசெய்ய தூண்டியவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்த 5 லட்சத்துக்கும் அதிகமான இந்துக்களை கலவரம் செய்து வெளியேற்றியவர். பயங்கரவாதியான அப்சல்குரு தூக்கிலிடப்பட்டபோது, இந்தியாவில் மும்பை தீவிரவாத தாக்குதல் உட்ப்பட பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் ஹபீஸ் சையது என்ற பயங்கரவாதியுடன், இணைந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர். இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருபவர். ஆக மொத்தத்தில் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானின் ஏஜென்ட். .
இப்படிப்பட்டவரைத்தான் இங்கு அழைத்து வந்து இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேச வைத்துள்ளனர் . இவரும் தன் பங்குக்கு காஷ்மீர் பிரச்னையும் , இலங்கை பிரச்னையும் ஒன்றே என்று கூறிவிட்டு வழக்கம் போல இந்தியாவை வசைபாடி தனது தேச விரோத மனப்பான்மையை வெளிப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தியாவின் குண்டுகள் என்னவோ இந்திரா காங்கிரஸின் தற்ப்போதைய ஆட்சி காலத்தில் தான் இலங்கை தமிழனை பலிவாங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் குண்டுகளோ காலம் காலமாக இலங்கை தமிழனை பதம்பார்த்து வருகிறது. ஆனால் இதை பற்றியெல்லாம வசைபாடாமல் தனது பாகிஸ்தான் மீதான பாசத்தையும் வெளிக்காட்டிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். இதை எல்லாம் கண்டு இங்குள்ள ஒரு சில கோமான்கள் புல்லரித்துதான் போயுள்ளார்கள்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழி பொதுவாக வழக்கத்தில் உண்டு. தேச துரோகிக்கு தேச துரோகி நண்பன் என்ற புதுமொழி இவர்களால் புதிதாக வழக்கத்தில் வந்துள்ளது.
சிங்களன் வருவதற்கு முன்பே இலங்கையின் வடகிழக்கு பகுதியில் வாழ்ந்தவன்தான் தமிழன். அவன் இழந்த நாட்டை கூட கேட்கவில்லை, உரிமையைத்தான் கேட்கிறான் . அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. இருக்கும் இடம் கூட சொந்தம் இல்லாத சூழ்நிலை . நன்கு படிப்பவனுக்கு கூட உயர் கல்வியில் உரிய இடம் கிடைப்பதில்லை . ஆக மொத்தத்தில் அவன் அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய அடிமை வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
காஷ்மீரிலோ நிலைமையே வேறு. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு வழங்க பட்டுள்ள சலுகைகளை விட காஷ்மீருக்கு அதிகமாகவே சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன . நம்மால் காஷ்மீரில் ஒரு குண்டூசி முனை அளவுக்கு கூட நிலம் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீரிகளோ இந்தியாவின் இண்டு இடுக்கு என்று எங்கு வேண்டுமானாலும் நிலங்களை வாங்கிக் குவிக்கலாம் . எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சிறப்பு சலுகைகளுடன் படிக்கலாம். அரசு ஊழியர்களுக்கான சம்பளமே இந்திய அரசின் கஜானாவில் இருந்துதான் போகிறது.
இலங்கை சிங்களனை விட இந்திய காஷ்மீரிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் தான் இருக்கிறார்கள். எனவே காஷ்மீர் பிரச்சனையை தமிழர் பிரச்சனையுடன் ஒப்பிட்டது அபத்தமான ஒன்றாக தோன்றினாலும் ஒரு விதத்தில் இரண்டு பிரச்னையும் ஒன்றே. இலங்கையில் பெரும்பான்மையினரான சிங்களர்கள் சிறுபான்மையினரான இந்துக்களை விரட்டுகிறார்கள் என்றால் . கஷ்மீரில் பெரும்பான்மையினரான இஸ்லாமியர்கள் சிறுபான்மையினரான இந்துக்களை விரட்டுகிறார்கள் இந்த விதத்தில் வேண்டுமானால் இரண்டும் ஒன்றாக இருக்கலாம்.
தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.