பண்டைய பாரதம் நமக்கு சொல்லும் செய்தி

 பண்டைய பாரதம் நமக்கு சொல்லும் செய்தி அது ஏன் சூத்திரன் மட்டும் உங்கள் கடவுளின் காலில் பிறந்தவன் என்று கேவலமாக்க படுகிறான்? இறைவனின் பாதங்கள்தான் இருப்பதிலேயே உயர்ந்தது. உருவகப்படுத்தப்பட்ட ஒரு சிலையில் கூட, அவன் தலையையோ, தோளையோ, வயிற்றையோ தொட்டு யாரும்

வணங்குவதில்லை. அவன் பாதங்களையே தொட்டு வணங்குவோம். ஆனால் சில மதமாற்று வேடதாரிகள் அப்பாவிகளை மதமாற்றுவதற்காக, இப்படி ஒருவிஷ விதையை விதைப்பது வழக்கம்.

பிராமண தன்மை ஆண்மீக அறிவையும் ஞானத்தையும் குறிக்கிறது. சத்ரிய தன்மை நிர்வாகம் மற்றும் ஆளுமையை குறிக்கிறது. வைசிய தன்மை வணிகம் செய்து செல்வம் ஈட்டுதலை குறிக்கிறது. சூத்திர தன்மை உழைப்பை குறிக்கிறது.

இந்த நான்கு தன்மைகளும் மனித கூட்டத்திற்கு மட்டும் இன்றியமையாதவை அல்ல. ஒரு தனி மனிதனுக்கே இந்த நான்கு தன்மையும் இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனில் தலை அறிவை குறிக்கிறது, தோள்கள் அவனின் வலிமையையும் வீர்த்தையும் குறிக்கிறது, வயிறு அவன் ஈட்ட வேண்டிய செல்வத்தை குறிக்கிறது, கால்கள் அவன் உழைப்பை குறிக்கின்றன.

சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் "கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் தேவை. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்கிற கருத்தை சொல்லியிருப்பார்கள். அது போல் மேலே குறிப்பிட்ட இந்த நான்கில் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியுமா ?

சராசரி வாழ்க்கையையே எடுத்து கொள்ளுங்கள். ஒருவன் வாழ்வதற்கு செல்வம் அடிப்படையாக இருக்கிறது ? அந்த செல்வத்தை எப்படி சேர்ப்பதென்று அறிவு வேண்டாமா ? அந்த செல்வத்தை ஈட்ட உழைப்பு வேண்டாமா ? அந்த செல்வத்தை காப்பதற்கு அவனுக்கு நிர்வாகத் திறனும், வீரமும் வேண்டாமா ? ஆக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த நான்கு குணங்களும் அடிப்படையாக உள்ளன.

ஒரு குணத்தையே பெரிதென்று நினைத்த சமுதாயங்களுக்கு என்ன நடந்தது ? திபெத்தியர்கள் என்ன செய்தார்கள் ? பிராமணத் தனமையையே பெரிதாக‌ நினைத்தார்கள். சத்ரிய தன்மையை புறிக்கனித்தார்கள். அதனால் என்ன நடந்தது ? இன்று திபெத்திய கலாச்சாரமே கேள்விக் குறியாக போய், அவர்களின் நாடு சீனாவின் வசம் உள்ளது. அவர்களால் சீனாவை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை.

பல வட ஆப்ரிக்க மற்றும் மேற்காசிய‌ நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் சத்ரிய‌ தன்மைக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். தூய்மையான ஆன்மிகம் மற்றும் அமைதியை புறக்கனித்தார்கள். அதனால் எப்போது பார்த்தாலும் போர்க்களமாகவே, அவர்களின் நாடுகள் இருக்கின்றன. பிராமன‌ தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அறிவும், ஆண்மீகமும் இல்லாமல் வன்முறை தாண்டவம் ஆடுகிறது.

கம்யூனிச நாடுகளை பாருங்கள். அவர்கள் சூத்திர தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். வைசிய தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தராத காரணத்தினால் வறுமை தாண்டவமாடுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாய் சீனா படிப்படியாய வைசிய தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதால் தான், அங்கே மக்களின் வாழ்க்கை தரம் உய‌ரத் தொடங்கியுள்ளது.

அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் மற்ற மூன்று தன்மைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, சூத்திர தன்மைக்கு கொடுக்கவில்லை. அதனால் அங்கு பெரும் உழைப்பாளர்கள் பற்றாக்குறையை காணலாம். ஒரு சிறு வேலையை செய்வதற்கு கூட ஆயிரக்கணக்கான டாலர்களும், யூரோக்களும் அங்கு கேட்கிறார்கள். அதனால் வேறு நாடுகளில் இருந்து அவர்கள் தொழிலாளர்களை பெரும் பொருட்செலவில் வரவழைக்க வேண்டியிருக்கிறது.

பொருளாதாரத்தின் காரணிகளாய் நான்கை சொல்வார்கள். அதாவது நிலம், தொழிலாளர்கள், மூலதனம், நிர்வாகம் என்று. இதை நாம் மாற்றினால் சரியாகிவிடும். அதாவது அறிவு, உழைப்பு, மூலதனம், நிர்வாகம். (இடம் என்பது மூலதனத்தில் அடங்கி விடுகிறது) வர்ணாசிரமம் என்பதே ஒரு அற்புதமான கோட்பாடுதான். காலப்போக்கில் ஏற்பட்ட சமூக ஏற்ற தாழ்வுகளினாலும், சமூக மாற்றங்களினாலும், அது முறைதவறிப் போனது.

எந்த தேசமாக இருந்தாலும் சரி. இந்த நான்கு தன்மைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தால்தான் அந்த நாட்டில், அமைதியும், செல்வமும், சமத்துவமும் இருக்கும். இது பண்டைய பாரதம் நமக்கு சொல்லும் செய்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...