பிரதமரின் உத்தரவின் பேரில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) மார்ச் 2015-ல் ‘அனுபவ்’ என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியது.
இது ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் பணிக் காலத்தில் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். இதுவரை 54 அனுபவ் விருதுகளும், 9 நடுவர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) 2016-ல் தொடங்கப்பட்டதிலிருந்து 7-வது அனுபவ் விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. அனுபவ் விருதுகள் மற்றும் நடுவர் சான்றிதழ்களை பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஆகஸ்ட் 28 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் 7-வது அனுபவ் விருதுகள் விழாவில் வழங்குவார்.
2024-ம் ஆண்டில், அனுபவ் விருது பெற்றவர்கள் மற்றும் நடுவர் சான்றிதழ் பெற்றவர்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர் (i) நிர்வாகப் பணி, (ii) நல்லாட்சி, (iii) ஆராய்ச்சி, (iv) நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், (v) கணக்குகள், (vi) பணியை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான கருத்து அல்லது ஆலோசனை.
இந்த விருது வழங்கும் விழா தனித்துவமானது, ஏனெனில் 15 விருது பெற்றவர்களில், 33% சதவீதத்தினர் பெண்கள் ஆவர், இது 2015-ல் தொடங்கிய ‘அனுபவ்’ வரலாற்றில் மிக உயர்ந்ததாகும், இது நிர்வாகத்தில் அவர்களின் வளர்ந்து வரும் பங்களிப்பை குறிக்கிறது.
அனுபவ் விருது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது: (i) பதக்கம் (ii) சான்றிதழ் (iii) ஊக்கத்தொகை ரூ.10,000/-, அனுபவ் நடுவர் சான்றிதழ், (i) பதக்கம் (ii) சான்றிதழ்
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |