பிகார் சட்டப் பேரவையில் நிதீஷ் குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்து வாக்களிக்க போவதாகவும் . இன்னும் 2-3 மாதங்களில் ஐக்கிய ஜனதாதளம் உடையும்வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாலு பாட்னாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;
நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள்கட்சியின் 22 எம்எல்ஏ.க்களும் நிச்சயமாக நிதீஷ் குமார் அரசை எதிர்த்தே வாக்களிப்பார்கள். முதல்வர் நிதீஷ் குமாரின் அதிகாரமமதை மற்றும் சில காரணங்களால் அவரது அரசின்நாள்கள் எண்ணப்படுகின்றன என்ற எனதுகருத்து சரியானது என்பது நிரூபணமாகிவருகிறது. புதன்கிழமை நடைபெற உள்ள நம்பிக்கைவாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதாதளம் அரசு கவிழாது. ஏனெனில், நான்குசுயேச்சைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏ.க்களின் ஆதரவை அக்கட்சி திரட்டிவிட்டது. ஆனால், இந்த அரசின் முடிவுக்கான ஆரம்பம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
நிதீஷ் குமார் ஒரு மத சார்பற்ற தலைவர் என்று பிரதமர்புகழ்ந்துள்ளது குறித்து கேட்டபோது, உயர்ந்தமனிதரான பிரதமர், யாரைப்பற்றியும் கனிவான வார்த்தைகளையே கூறுவார். இன்னும் 2-3 மாதங்களில் ஐக்கிய ஜனதாதளம் உடையும்வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்றார் அவர்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.