நாடுமுழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இதன்பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்றுவெள்ளம், நிலச் சரிவு, வெள்ளப் பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது . இதற்கிடையே
கேதர்நாத் ஆலயத்துக்கு அருகே மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 50 காவல் துறையினரை காணவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும், வெள்ளம்காரணமாக இமயமலை தொடரில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புண்ணிய தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசியிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கத்தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும் டெல்லியில் யமுனை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இது குறித்து டெல்லி அரசு செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில்,” யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அபாயகட்டத்துக்கு மேல் உள்ளது.
வெள்ள அபாயம்குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஷீலாதீட்சித் தொடர்ந்து பேசிவருகிறார். யமுனை ஆற்றின் கரையோரமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக நான்குமாவட்டங்களில் 400 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படகுக்குழாமில் 62 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.