உத்தரகாண்ட் வெள்ளம் , நிலச் சரிவில் சிக்கி 13 ஆயிரம்பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் பலியாகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட்டின் புனித தலங்களுக்கு ஆன்மிகபயணம் மேற்கொண்ட பல்லாயிர கணக்கான பக்தர்கள் அங்கு பெய்த பேய்மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி யுள்ளனர். முதலில் 72 ஆயிரம்பேர் சிக்கி தவிப்பதாக தகவல்கள்வெளியாகின. ஆனால் ஏறத்தாழ 1 லட்சம்பேர் சிக்கி தவித்து கொண்டிருந்தது தற்போது கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
உத்தரகாண்டில் இதுவரை 33192 பேர் ராணுவத்தினர், இந்தியதிபெத் எல்லை பாதுகாப்புபடை போலீசார், தேசியபேரிடர் மீட்புபடையினர் போன்றோரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இன்னும் 50422 பேர் சிக்கிதவித்து வருகின்றனர். 13000 பேர் காணாமல் போய்விட்டனர். இவர்கள் பற்றி இது வரை சரியான தகவல் எதும் இல்லை. எனவே பலி என்னிக்கை பல்லாயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்க படுகிறது.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.