மோடியின் நெகிழ்ச்சியான தருணம்

‘ஆப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக சிக்கி இருந்த பேராயர் அலெக்ஸிஸ் பிரேம்குமாரை மீட்டு வந்ததுதான் எனக்கு மிகவும் திருப்தியான தருணம்,’ என்று டில்லியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.டில்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சமுதாயத்தின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:
இந்நிகழ்ச்சியில் தான் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது. உங்களுடன் நான் பங்கேற்பது, நம் அனைவருக்குமே மறக்க முடியாததொரு தருணமாக அமைந்துள்ளது. உலகில் வன்முறையைப் பரப்பும் முயற்சிகள் நடக்கும்போது மனது வலிக்கிறது.

ஆண்டவர் கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த அனைவரும் பணியாற்றுவது முக்கியம். பத்தாண்டுகளுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து பேராயர் அலெக்சிஸ் பிரேம் குமாரை பத்திரமாக அழைத்து வந்தது எனக்கு மிகவும் திருப்திகரமான தருணம். அவர் எட்டு மாதங்கள் அங்கேயே சிக்கி, பிணைக் கைதியாக இருந்தார்.

எங்களைப் பொறுத்தவரை, இந்த பணிகள் அனைத்தும் வெறும் தூதரகப் பணிகள் மட்டும் அல்ல. குடும்ப உறுப்பினர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு.அவர்கள் எங்கிருந்தாலும், எந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும், இன்றைய இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை தனது கடமையாகப் பார்க்கிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற ...

தமிழகத்தின்  சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் ரவி பிரதமர் மோடியுடன் ஆலோசனை டில்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். ...

2025-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் :பிரதம ...

2025-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் :பிரதமர் மோடி ஆலோசனை 2025ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தொடர்பாக, பொருளாதார நிபுணர்களுடன் ...

ஓட்டுக்காக விட்டுக்கொடுக்கும் ...

ஓட்டுக்காக விட்டுக்கொடுக்கும் திருமாவளவன் – தமிழிசை வேங்கைவயலில் குடிநீரில் மலம் கழித்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. டங்ஸ்டன் ...

தமிழக அரசின் நிதி எங்கே செல்கிற ...

தமிழக அரசின் நிதி எங்கே செல்கிறது – அண்ணாமலை கேள்வி 'தமிழக அரசின் நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்பதை, ...

இளைஞர்களின் திறமைக்கு வழிவகுப ...

இளைஞர்களின் திறமைக்கு வழிவகுப்பதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் -மோடி “நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு இளைஞர்களின் திறமைகளை ...

மோடியின் நெகிழ்ச்சியான தருணம்

மோடியின் நெகிழ்ச்சியான தருணம் 'ஆப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக சிக்கி இருந்த பேராயர் அலெக்ஸிஸ் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.