மத்திய அரசின் புலனாய்வு_ அமைப்பான சி.பி.ஐ, இப்போது காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு அமைப்பாக செயல்படுகிறது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் இளைஞர்களுக்கு வேலைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஷ்ரத்ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத்மாநிலத்தில் மேலும் பல அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என சி.பி.ஐ தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து அவர் மேலும்கூறியதாது:
தங்கள் அரசியல்_ முதலாளிகளுக்கு விசுவாசியாக சி.பி.ஐ செயல்படுகிறது. சிபிஐ விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு குஜராத் அரசு ஒரு போதும் பயப்படாது. ஒவ்வொரு நாளும் சி.பி.ஐ மூலம் ஏதாவது அச்சுறுத்தலை அளிக்க மத்தியஅரசு முடிவுசெய்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ இப்போது காங்கிரஸ் புலனாய்வுஅமைப்பாக மாறிவிட்டது.
குஜராத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக புலனாய்வுநடத்தி வழக்குப் பதிவுசெய்கிறது. தங்களுக்கு உள்ள அதிகாரவரம்பை அவர்கள் தவறாக பயன் படுத்துகின்றனர். ஜனநாயக நாட்டில் புலனாய்வு அமைப்பிற்க்கு என்று உள்ள சில வரைமுறையை மீறி செயல் படுவதால், பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை சி.பி.ஐ முற்றிலுமாக இழந்து விட்டது என்றார் அவர்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.