உண்மையில் எது அரசியல்?

உண்மையில் எது அரசியல்? உத்தரகாண்ட் இயற்கை சீரழிவை பயன்படுத்தி கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடியதா? நரேந்திரமோடியும், ராகுல் காந்தியும் இதனால் எவ்வளவு பயனடைந்தார்கள்.?

ஜுன் 18 டில்லியில் நடைபெற இருந்த திட்டகமிஷன் கூட்டத்திற்காக (ஜுன் 17ந் தேதி நரேந்திர மோடி) டில்லி சென்றார். தொலைகாட்சியில் உத்தரகாண்ட் நிலச்சரிவு மற்றும் வெள்ளச் செய்திகளை பார்த்தார். குஜராத்தில் பூஞ்ச் பூகம்பத்தில் பணியாற்றிய அனுபவம் மோடிக்கு இருந்ததால் பெரிய உயிர்ச்சேதம் எதுவும் ரிப்போர்ட் செய்யப்படாத போதும், மோடி உடனே களத்தில் இறங்கினார்.

குஜராத் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடுத்தநாள் ஜுன் 18 அன்றே டில்லியில் இருந்த குஜராத் பவனை “உத்தரகாண்ட் பேரிடர் மீட்பு அலுவலகமாக” மாற்றினார். இந்தகால கட்டத்தில் “சார்தம்” என்னும் பண்டிகையை ரிஷிகேஷ், ஹரித்துவார் மற்றும் கேதார்நாத்தில் கொண்டாடும் குஜராத்திகள் சுமார் 60,000 பேர் வரை அங்கிருப்பதாக தெரிந்து கொண்டார்.

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை தொடர்பு கொண்டு குஜராத்தில் பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்ற ஒரு அதிகாரிகள் குழுவையும், 24 ஹெலிகாப்டர்களையும், இரண்டு கோடி ரூபாய் நிவாரணமும் அனுப்பிவைத்தார். உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசு அரசியல் காரணங்களுக்காக 24 ஹெலிகாப்டர்களையும் வேண்டாம் என திருப்பி அனுப்பியது.

 எந்த அரசியல்வாதியும் முதலில் போகாத, கவனிக்காத, டேராடூனுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி, உத்ரகாண்ட் முழுவதும் நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கித்தவித்த மக்களை மீட்க மோடி தன் நிர்வாகத்திறமை, அனுபவம் மற்றும் பங்களிப்பை செய்தார். கடுமையான சேதமான கேதர்நாத் கோவில் இனி வெள்ளமோ, இயற்கை சீரழிவோ தாக்காமல் இருக்கும் வண்ணம் புதிய தொழில்நுட்பத்தில் கட்டித்தருவதாக உறுதி அளித்தார். இவைகளை காங்கிரசும் ஊடகங்களும் அரசியல் ஆக்கியது.

15000 பேரை காப்பாற்றியதாக மோடியோ, குஜராத் அரசு அதிகாரிகளோ, கூறவில்லை, ஊடகங்களே கூறியது. காங்கிரஸ் இதையும், கோவிலையும் கையில் எடுத்து கூத்தாடியது.
மாறாக ராகுல்காந்தி என்ன செய்தார் ஜுன் 15,16,17 உத்தரகாண்ட் பேரழிவில் சோகத்தில் மூழ்கியபோது ராகுல் 19ந் தேதி தன் பிறந்த நாளை கொண்டாட தன் நண்பர்களுடன்? ஐரோப்பாவில் ஸ்பெயினில் சுற்றிக் கொண்டிருந்தார். மோடி மீட்புப்பணியில் இறங்கி குஜராத்துக்கு திரும்பிய செய்து கேட்டு, காங்கிரஸ் ராகுலை, அவசர அவசரமாக இந்தியா திரும்பவைத்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் 20 லாரி நிவாரணப் பொருட்கள், கொடி அசைத்து வழி அனுப்ப, 3 நாட்களாக, ராகுலின் இந்திய வருகைக்காக காத்திருந்தது. இதைவிட வேடிக்கை ராகுலும், சோனியாவும் உத்தரகாண்ட் சென்று திரும்பி 3 நாட்களாகியும், நிவாரண லாரிகள் அங்கு சென்றடையவில்லை. காரணம் லாரிகளுக்கு டீசல் தீர்ந்துவிட்டதாம். டீசலுக்கு காங்கிரஸ் காசு கொடுக்கவில்லையாம். இதுதான் காங்கிரஸின் நிவாரண லட்சணம்.

ஏற்கனவே சீரழிவினால் தவித்துக் கொண்டிருந்த மக்களிடம், சோனியாவும், முதலமைச்சர் விஜய் பகுகுணாவும் சிரித்து போஸ் கொடுத்த படத்துடன் வினியோகிக்ப்பட்ட காங்கிரஸ்  நோட்டிசை பார்த்து மக்கள் கொதித்து போயினர். உண்மையில் அமைதியாக நிவாரணப்பணியில் ஈடுப்பட்ட மோடியை மீடியாக்கள் துரத்தி விளம்பரபடுத்தின. ஆனால் விளம்பரத்திற்காக, பிறந்தநாள் விழாவின் பாதியில் ஸ்பெயினிலிருந்து ராகுல்காந்தி மீடியா புடைசூழ உத்தரகாண்ட் வந்தார். இதிலிருந்து எது அரசியல் என்பது நமக்கு தெரிந்தால் சரி.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...