குஜராத் முதல்வர் நரேந்திரமோடியால், காங்கிரஸ் கட்சிக்கு, பித்துபிடித்து விட்டது. அதனால்தான், உத்தரகண்ட் வெள்ளசேதத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நரேந்திர மோடியின் உதவியை, அம்மாநில அரசு வெளிப்படுத்தவில்லை,” என்று பா.ஜ.க., தேசியசெயலர் திரிவேந்திர சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் செய்தியாளர்களிடம் மேலும் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பரந்த மனப்பான்மையுடன் கணிசமான தொகையை உதவினார் . 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணபொருட்களையும், ரயில்மூலம், உத்தரகண்டிற்கு அனுப்பிவைத்தார். அத்துடன், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்கவும், இடிபாடுகளை அகற்றவும், குழுஒன்றையும், மோடி அனுப்பிவைத்தார். ஆனால், அந்தக்குழுவின் சேவை தேவையில்லை என்று உத்தரகண்ட் அரசு, திரும்பி அனுப்பிவிட்டது.
உத்தரகண்ட் மாநில அரசு_ நிர்வாகத்தில் உள்ள யாரும், மோடிசெய்த உதவிகள் பற்றி, இதுவரை வாய்திறக்கவில்லை. மோடிக்கு சாதகமான, அவருக்கு செல்வாக்கை தேடித் தரக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் அரசு, வேண்டும் என்றே மறைக்கிறது. இதிலிருந்தே, மோடியின் பெயரைக்கேட்டாலே, காங்கிரஸ்க்கு பித்து பிடித்தது போலாகிவிடுகிறது . உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க, 20 ஆயிரம்கோடி ரூபாய் தேவை. ஆனால், 1,000 கோடியை மட்டுமே, மத்திய அரசு அளித்துள்ளது. உத்தரகண்ட் துயரத்தை, தேசியபேரழிவாக அறிவிக்க வேண்டும். என்று திரிவேந்திரசிங் கூறினார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.