ரூ.16,725 கோடி ஜிஎஸ்டி பாக்கி ஸ்டாலினின் புது பொய்

கொரோனா நேரத்தில்கூட தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.16,725 கோடி ஜிஎஸ்டி நிலுவையை இழுத்தடிக்கின்றனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வரவேண்டிய கரோனா நிவாரண நிதி ரூ.8,989 கோடியும் தரப்படவில்லை என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவலை பரப்புவது முதலமைச்சருக்கு அழகல்ல. அவர் குறிப்பிட்டிருக்கும் ரூபாய். 16,725 கோடி எதன் அடிப்படையில், எந்த மாதத்திற்கான நிலுவை என்ற முழு விவரங்களை வெளிப்படையாக புள்ளி விவரங்களோடு வெளியிட வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.

கடந்த டிசம்பர் 8 ம் தேதியன்று தி மு க வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு அவர்களின் கேள்விக்கு, ஏப்ரல் 2020 – மார்ச் 2021 நிதியாண்டிற்கான நிலுவை ரூபாய்.2894 கோடி ரூபாயும், ஏப்ரல் -செப்டம்பர் 2021 க்கான அரையாண்டுக்கான நிலுவை தொகை ரூபாய் 2049 ஆக மொத்தம் ரூபாய் 4943 கோடி மட்டுமே தமிழகத்திற்கான ஜி எஸ் டி தொகை நிலுவையில் உள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய நிதி துறை இணையமைச்சர் பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளதை தமிழக அரசு மறுக்கிறதா? ஏற்கிறதா? என்பதோடு அதன் பின்னர், ஜனவரி மாதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிலுவை தொகையையும் கணக்கில் கொண்டு தற்போது உள்ள உண்மையான தொகையை குறிப்பிடுவது சிறப்பை தரும்.

தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது பேரிடர் காலங்களில் மக்களின் உடனடியான (மக்களுக்கான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள்) மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி. மாநில பேரிடர் நிதியில் பற்றாற்குறை ஏற்படும் நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை விடுவிக்கப்படும். நிரந்தர தீர்வுகளுக்கான ஒதுக்கீடுகள், இழப்பு ஏற்படும் துறை சார்ந்தே ஒதுக்கப்படும் என்பது விதி மற்றும் நடைமுறை.

மேலும், மேலும், நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படியம் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மாநில அரசுகளின் ஒப்புதலின் பேரிலேயே மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் 75 விழுக்காடு மத்திய அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, மத்திய அரசு 2019-20ம் நிதியாண்டில் ரூபாய்.618.75 கோடியும், 2020-21ம் நிதியாண்டு மற்றும் 2021-22 ம் நிதியாண்டில் ரூபாய்.1020 கோடியும், 2021-22 ம் நிதியாண்டில் ரூபாய்.816 கோடியும் தமிழகத்திற்கு வழங்கி விட்டது. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மாநில பேரிடர் நிதி ஒதுக்கீடான ரூபாய்.3273 கோடியில், மத்திய அரசின் பங்கான ரூபாய்.2454.75 கோடியை வழங்கி விட்ட நிலையில், எதன் அடிப்படையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு நிலுவை தொகை பாக்கியுள்ளது என முதல்வர் அவர்கள் வலியுறுத்துகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிதியிலிருந்து உறுதியளிக்கப்பட்ட தொகையை வழங்கப்படவில்லையெனில் தான் அது நிலுவையாக கருதப்படுமேயன்றி, ‘நான் கேட்டேன், நீ கொடுக்கவில்லை’ என்ற அடிப்படையை கொண்டு, மத்திய அரசு நிலுவை தொகையை கொடுக்க மறுக்கிறது என்று குற்றம் சாட்டுவது மக்களை திசை திருப்பும் சந்தர்ப்பவாத அரசியல் என்பதை முதல்வர் உணரவேண்டும்.

கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுகாதார துறையில் பல்லாயிரம் கோடியை ஒதுக்கி பாதுகாத்ததோடு, பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு கடன் திட்டங்களை முன்னெடுத்து, தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாயில் இலவச உணவு பொருட்கள், இலவச எரிவாயு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம், விவசாயிகளுக்கு ரூபாய் 2000, அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பல்லாயிரம் கோடிகளை செலவிட்டுள்ளது மத்திய அரசு. அதை மறந்து விட்டு, மறைத்து விட்டு, இல்லாத ஒரு விவகாரத்தை இருப்பது போல் பேசுவதை தவிர்த்து, உண்மையை சொல்லி ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்குமா தி மு க அரசு?.

நன்றி நாராயணன் திருப்பதி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படையின் தயார்நிலை குறித்த ...

கடற்படையின் தயார்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, ...

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...