யார் பிரதமர் என்பது முக்கியம் அல்ல பாஜக. ஆட்சி அமையவேண்டும் என்பதே முக்கியம்

 யார் பிரதமர் என்பது முக்கியம் அல்ல பாஜக. ஆட்சி அமையவேண்டும் என்பதே முக்கியம் ஒடிசா சென்றிருந்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பூரியில் ஒடிசா மாநில பாஜக. தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார் அதில் அவர் பேசியதாவது.:-

காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதா தளம் கட்சிகளின் ஆட்சியில் நடைபெறும் நிர்வாகசீர்கேடுகள் தொடர்பான பட்டியலை நீங்கள் தயார்செய்துகொள்ள வேண்டும்.

இந்த குறைபாடுகளையும், பாஜக.வின் முக்கியகொள்கைகளையும் விளக்கி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 10000 வாக்காளர்களுக்கு தொடர்ந்து நீங்கள் எஸ்எம்எஸ். அனுப்பவேண்டும்.

நவீனதொழில்நுட்ப உலகில் நாம் வாழ்கிறோம். கிராமங்களில் இருப்பவர்கள் கூட தற்போது ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த தொழில் நுட்பத்தை துணையாக்கி கிராம மக்களை சந்திக்க பாஜக.வினர் முயலவேண்டும்.

1990ம் ஆண்டு குஜராத்தில் பாஜக.விற்கு வெறும் 16 எம்எல்ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அந்தமாநிலத்தை நாம்தான் ஆட்சிசெய்கிறோம். இனியும் செய்வோம். இந்த நிலை ஒடிசாவிலும் ஏற்பட இங்குள்ள தலைவர்கள் உழைக்கவேண்டும்.

பாஜக. சார்பில் பிரதமர் பதவியில் யார் அமரப் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. மத்தியில் மீண்டும் பாஜக. ஆட்சி அமையவேண்டும் என்பதே முக்கியம். அந்த நோக்கத்தில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...