எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரே சிதைச்சுட்டானுங்களே!

 19.07.2013 வெள்ளிகிழமை இரவு 9.40 அளவில் சேலம் மரவனேரி முதல் கிராசில் உள்ள அலுவலக வாசலில் உடல் சரிந்து கிடந்தார் பா.ஜ.க மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்.

உடலெங்கும் பலத்த வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்க ‘எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரே நம்ம தலைவரை சிதைச்சுட்டானுங்களே!’ என திரண்ட பா.ஜ.க.வினர் கதறி அழுதனர். அந்த அக்ரகார வீதியில் அனைவரும் கதவை சாத்தியபடி உள்ளே இருக்க ‘உங்களுக்காகவும் தான போராடினார்’ என கதறினர்.

நாம் சேலம் மாவட்ட செயலாளர் கோபிநாத்திடம் நம் இரங்கலை தெரிவித்துவிட்டு பேசினோம்.

‘யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவரு. ரொம்ப தங்கமான மனுசர். அவரை கோபமான தோற்றத்தில் யாரும் பார்துருக்கவே முடியாது. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பார். ல்லோரையும் அனுசரித்து செல்பவர். கொள்கை வேறு நட்பு வேறு என மாற்று கொள்கை கொண்ட அமைப்பினரிடமும் நட்பு பாராட்டுபவர். கிட்டத்தட்ட இருவத்தி அஞ்சு வருஷமா இயக்கத்தில இருக்காரு. இந்துகளின் வளர்ச்சிக்காகவே எந்நேரமும் சிந்திசுகிட்டே இருப்பாரு. ரோட்டுல போகும் போது வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டு இருந்தால் அதில் கார் சக்கரம் ஏறாதபடி எப்படியாவது தள்ளி செல்வாரு. கஷ்டப்பட்டு கோலம் போட்டு இருக்காங்க இது நம் பாரத பெண்களின் ஆன்மிகம் நிறைந்த ஓவிய கலை நாம இதுல காரை ஏற்றினால் அவர்கள் இதயத்தில் ஏற்றியது போல அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுனு’ சொல்லும் உயர்ந்த மனிதர். அந்த மனிதநேயத்தை தான் படுபாவிங்க சாச்சுட்டானுங்க. குடும்பத்தோட டின்னர் போயிட்டு அலுவலகம் திரும்பியவர கொன்னுட்டானுங்க. திட்டம் போட்டு தான் செஞ்சுருப்பானுங்க. இந்துகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. நியாயம் கிடைக்கணும் என குமுறினார்.

விவரம் அறிய இரவு நேரத்திலேயே ஆடிட்டர் ரமேஷ் அலுவலகம், அருகில் உள்ள வீடு நோக்கி கட்சியினர் திரள தொடங்கினர். நன்றி நக்கீரன்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...