இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு குறித்து, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர், ஷகீல் அகமது கூறிய கருத்துக்கு பிரதமர், மன்மோகன்சிங் தன் கருத்தை தெரிவிக்கவேண்டும்’ என, பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் செய்திதொடர்பாளர்களில் ஒருவரான ஷகீல் அகமது, தன் இணையதள பக்கத்தில், “இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு, குஜராத்கலவரத்திற்கு பிறகே துவக்கப்பட்டது’ என்று எழுதியிருந்தார். இதையடுத்து, பலத்தசர்ச்சை எழுந்துள்ளது.
டில்லியில் நேற்று, பா.ஜ.க., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான, ராஜிவ்பிரதாப் ரூடி கூறியதாவது: ஷகீல் அகமது கூறியுள்ளகருத்தை, சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சி, இவ்விஷயத்தில் அமைதிகாப்பது, வினோதமாக தெரிகிறது .
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலும், பிரதமர் மன்மோகன் சிங்கும், தங்கள்கருத்தை தெரிவிக்கவேண்டும். தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை, வெளிப்படையாக சொல்லவேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக, நாடுமுழுவதும் பலத்தகுரல்கள் எழுந்து வருகின்றன. தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டுமென்றும், அதற்கு துணை போகக்கூடாது என்றும், மக்கள் விரும்புகின்றனர். ஆனால், ஷகீல் அகமதின் கருத்தோ, தீவிரவாதத்தை ஆதரிப்பதுபோலவும், தீவிரவாத அமைப்பை நியாய படுத்துவது போலவும் உள்ளது.
ஓட்டுக்காக நாட்டின் பாதுகாப்பை பலிகொடுத்து, தீவிரவாதத்துக்கு, காங்கிரஸ் துணைபோகிறதோ என, நினைக்க தோன்றுகிறது. நாட்டுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை, காங்கிரஸ் மறந்துவிட வேண்டாம். என்று ராஜிவ் பிரதாப் ரூடி, கூறினார்
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.