காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நேற்று மதக் கலவரம் மூண்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதைக்கண்டித்து ஜம்மு பகுதியில் பாஜ இன்று பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நேற்று ரம்ஜான்னை முன்னிட்டு முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 500க்கும் அதிகமானோர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் தேசத்துக்கு விரோதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் கலவரம் மூண்டது .
கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மோதலை கட்டுப்படுத்த 2 கம்பெனி ராணுவம் வரவழைக்கப்பட்டது. நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையும் மீறி பல இடங்களில் மோதல் தொடர்கிறது.
இந்நிலையில் கிஷ்த்வார் மதக் கலவரத்தை கண்டித்து இன்று ஜம்முபகுதியில் ஒருநாள் பந்த் போராட்டத்துக்கு பாஜக அழைப்புவிடுத்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக 500 ராணுவவீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.