வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் ஆசை என்று ஒன்று இருக்கும்…அதுபோல ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் ஒரு ஆசை இருக்கும்..
நம்மைப்போல பாஜக தொண்டனுக்கும், வாழ்நாள் ஆசை அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
என்போன்ற சாதாரண தொண்டனுக்கும் அதே ஆசைதான்..வாஜ்பாய் அவர்களை 1995–96 களில் பெங்களூரு தேசிய கவுன்சில் கூட்டத்தில், அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று, பார்த்தேன்..பேசினேன்..உள்ளம் பூரிப்படைந்தேன்..
அத்வானிஜி அவர்களை 1977 மதுரையில் கூடலழகர் பெருமாள் கோயில் திடலில் அவர் ஐ.& பி. மினிஸ்டராக இருந்தபோதுபேசிய கூட்டத்தில், நானும் திரு.எல்.ஜி. அவர்களும் கலந்து கொண்டோம்..பின்னர் மதுரை சர்க்யூஸ்ட் ஹவுசில் நேரில் சந்தித்து பேசினோம்.
அதற்கு பிறகு பல கூட்டங்கள் , பல யாத்திரைகள், பல மாநாடுகளில் அத்வானிஜி அவர்களை சந்தித்திருக்கிறேன்.
1998 கோவைகுண்டு வெடிப்பன்று, கோவை ஏர்போர்ட்டில் சந்தித்து, அவருடன் அரசு மருத்துவமனையில், குண்டடி பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னதுமுதல், மீண்டும் ஏர்போர்ட்டில் திரும்ப அனுப்பும் போது , "குண்டு வெடிக்கப்போவது அரசுக்கு முன்னமே தெரியும்", என்பதுவரை அவரிடம் விவரித்திருக்கிறேன்.
எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், எவ்வளவு முறை சந்தித்திருந்தாலும்,1984, அவரை டெல்லியில் அவரது வீட்டில் சந்தித்தற்கு பிறகு இம்முறை நேற்றுதான், ( பொருளாளர் கூட்டத்திற்க்காக டெல்லி வந்தேன்) அவரை வீட்டில் சந்திக்கும் மாபெரும் பாக்கியம் கிட்டியது..
ஆம்..பாஜகவின் ஒவ்வொரு சாதாரண தொண்டனின் ஆசை போல என்னுடைய ஆசையும் நேற்று நிறைவேறியது….
ஒரு தொண்டன் எளிதாக சந்திக்கும் தூரத்தில் ஒரு தலைவன் இருந்தாலே அவன் உண்மையான தலைவன்…நரேந்திர மோடியை போல அத்வானிஜி அவர்களையும் எளிதாக சந்திக்க முடியும்..ஒரு போனிலேயே எனக்கு அப்பாயின்மெண்ட் கிடைத்தது..அவரே எடுத்தார்..அவரே கொடுத்தார்.. 15 நிமிடத்தில் அவர் வீட்டில் இருந்தேன்…."இசட் பிளஸ்" பாதுகாப்பு பிரிவின் கீழ் அவருக்கு பாதுகாப்பு இருப்பதால்தான் அவரை வெளியூர்களில் சந்திப்பது கடினமாக இருப்பதை புரிந்து கொண்டேன்..
நான் போனபோது அவரின் வீட்டின் அலுவலக அறையில், பாரளுமன்ற குறிப்புக்களை படித்து அடிக்கோடு இட்டுக்கொண்டிருந்தார்..வணக்கம் தெரிவித்து அமர்ந்த பிறகு, கடந்தகால நிகழ்வுகள் பலவற்றை நினைவு கூர்ந்தார்..சாப்பிட என்னவேண்டுமென கேட்டு.. கொண்டு வரச்சொன்னார்..
அவரது அறையில், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் அனைத்தும் அத்வானிஜி படித்தது..அத்வானிஜி ஒரு புத்தகப்பிரியர்..அவருக்கு எதிரே கம்பீரமான வீரசாவர்க்கர் படம் பிரமாதமாக …பிரதானமாக ….மாட்டப்பட்டிருந்தது..கண்னைக் கவர்ந்தது..
பாராளுமன்றம் மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு பேச்சுக்கும் மத்தியில் அதற்கான அவரது கடுமையான தயாரிப்பும் இருக்கிறது என்பதை பார்த்தேன்..கோவை குண்டுவெடிப்பில் நான் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது முதல் கடைசியாக அப்துல் நாசர் மதானியின் "கொலை மிரட்டல் கடிதம் " வரை விசாரித்தார்..அவரது ஞாபக சக்தியும், அன்றளவு நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்கும் ஆற்றலும் வியக்கவைத்தது…
டீ வந்தது..மிகச்சூடாக இருந்தது..ஆற நேரமாகும் என்பதால், டீ வேண்டாமென்றேன்..உணர்ந்து கொண்ட அத்வானிஜி, பரவாயில்லை..மெதுவாக குடியுங்கள்..நான் வெயிட் பண்ணுகிறேன். என்றார்.1984 இல் அவர் இல்லத்துக்கு சென்ற போது அவரே டீ போட்டு கொண்டுவந்து கொடுத்ததை நினைவு கூர்ந்தேன்..அவரும் அது பழைய வீடு தற்போது இருப்பது அல்ல என்பதை நினைவு படுத்தினார்..
உலகம் வியக்கும் ஒரு மிகப்பெரிய தலைவன், தன் கட்சி தொண்டனை தனக்கு சமமாக மதிப்பதும் நடத்துவதும், ஒரேஒரு அரசியல் கட்சியில்தான் நடக்கும் ..அது பாஜக மட்டுமே என்பதை நமது அத்தனை தலைவர்களும், குறிப்பாக அத்வானிஜியும், மோடியும், நிரூபித்து வருகிறார்கள்.என்பதை நான் 2012 தேர்தலுக்கு குஜராத் போனபோதும் சரி நேற்று டெல்லி போனபோதும் பார்த்தேன்.
பல்வேறு சம்பாஷணைக்கு பிறகு, வருகின்ற பொதுத்தேர்தலில், தமிழக பாஜக சார்பில் அதிக எம்.பி.க்களை பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்..இதற்காக தமிழக பாஜக எடுத்திருக்கும் முயற்சிகளையும், அமைப்பு ரீதியாக அதன் வெற்றிகரமான செயல்பாடுகளையும் நான் அவரிடம் விவரித்தேன்…
இந்தியாவின் துணைப் பிரதமர்.—உள்துறை அமைச்சர்—இரண்டாம் வல்லபாய் பட்டேல், என்ற பெருமைகளை பெற்ற ஒருதலைவனின் எளிமை–அன்பு—கனிவு–தொண்டனை நடத்திய விதம்…உண்மையில் நெஞ்சம் இனித்தது..இதுதான் பாஜகவின் அடிப்படை தன்மை என்பதை அவரும் நடந்து காட்டி நிரூபித்தார்..
பாஜகவின் ஒரு சாதாரண தொண்டனை மதித்து இவ்வளவு நேரம் பேசியமைக்கு நன்றி என்றேன்..நானும் ஒரு சாதாரண தொண்டந்தான் என அவர் கூறியதும் என் கண்கள் பனித்தது..எளிமைக்கு இதைவிட ஒரு உதாரணம் எந்த கட்சியில் சொல்லமுடியும்..இவ்வளவு தூரத்திலிருந்து ..தமிழ்நாட்டிலிருந்து… நீங்கள் வரும் போது.. என் நேரம் ஒன்றும் பெரிதில்லை, என்ற அவரின் வாக்கியங்கள் என் மனதை இன்னும் சுற்றி சுற்றி வருகிறது.
நம் தலைவர்கள், எளிமையனவர்கள், இனிமையனவர்கள், அறிவு ஜீவிகள், தொண்டர்களை மதித்து கௌரவிப்பவர்கள், என்பதை நான் அத்வானிஜி அவர்களிடம் பார்த்தேன்..அவரிடம் பேசிய அந்த பொன்னான 40 நிமிடங்கள், என் வாழ்வின் மறக்கமுடியாத நிமிடங்கள்..அம் மாமனிதனின் பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றேன்..
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.