இந்திய வீரர்கள் 5 பேரை கொன்றதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள இந்தியதூதரை திரும்ப பெறவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார் .
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்தவாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியவீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைதொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பிலும் அவ்வப்போது துப்பாக்கிசண்டை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியதூதரை திரும்ப அழைக்கவேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக புது டெல்லியில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது. பாகிஸ்தான் உடனான தூதரக உறவுகளை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியதூதரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பாகிஸ்தான் பிரச்னை எல்லை தாண்டி விட்டது. சரியானநேரத்தில் தக்கபதிலடி கொடுத்திருந்தால் இந்தியநிலைகள் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வந்திருக்காது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.