தேசியக் கொடி அவமதிப்பு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு செல்ல அனுமதிமறுக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி அகமதாபத்தில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான் அவுட்ஆகி பெவிலியன் திரும்பும் போது இந்திய ரசிகர்கள் சிலர் அவரை ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய விமர்சனத்திற்கு உள்ளானது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இந்திய ரசிகர்களின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விமர்சனத்தை முன்வைத்தனர்.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டபதிவில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேசியக்கொடி எடுத்துச்செல்ல: விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கவேண்டும். வெறுப்பை பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று சாடியிருந்தார். இந்த நிலையில், தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய தேசியக் கொடியை எடுத்து செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூவர்ணகொடியை அவமதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம்எழுப்பியதில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை மறந்துவிட்டார்.

திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கதலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமனி, தேசியகொடியை அவமதித்து தனது அரசியல் பிரசாரத்தை மேலும் ஒருபடி மேலே எடுத்து சென்றுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காணசெல்லும் ரசிகர்கள் கையில் இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல மைதானத்திற்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்தஅதிகாரத்தை கொடுத்தது யார்? இந்திய தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு மக்களிடம் திமுகவும் மன்னிப்பு கேட்கவேண்டும். தவறினால் மூவர்ண கொடியின் கண்ணியத்தை காக்கதவறிய திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தித்திற்கு பாஜக தள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...