உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நாட்டின் நடப்புகணக்கு பற்றாக் குறை மிகவும் ஆபத்தான பரிமாணங்களைதொடும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; ஒருநாட்டின் மொத்த ஏற்றுமதியானது, மொத்தபொருட்களின் இறக்குமதி, சேவைகள் மற்றும் பண்ட மாற்றுகளை காட்டிலும் அதிகமாக இருக்கிற போது, நடப்புகணக்கில் இந்த பற்றாக் குறை அதிகரிக்கும்.
பணப் பற்றாக்குறை அதிகரிக்கிற போது, அரசின் மொத்த செலவுத் தொகையானது அது உருவாக்கிற வருமானத்தைவிட அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு மசோதாவை பாரதீய ஜனதா ஆதரித்தாலும், இத்திட்டத்தில் சிலமாற்றங்களை விரும்புகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐ.மு., கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் உள்நாட்டு, வெளிநாட்டுமுதலீடுகள் குறைந்துள்ளது. இதை மீண்டும் நிலை நிறுத்துவது ஒரு இமாலாயப் பணி ஆகும்.
இந்தியாவின் பொருளாதார நிலை இதுவரைக்கும் இல்லாத ஒருமோசமான நிலையை எட்டியிருப்பது சுதந்திரத்திற்கு பிறகு இதுவே முதல் முறையாகும். பன்னாட்டு தர வரிசை நிறுவனங்களும் இதையே பட்டியலிடுகின்றன.
இந்திய ரூபாயின்மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவதால் நாட்டின் ஏற்றுமதி மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. பல்வேறு துறைகளில் உற்பத்தி பெரிதும்பாதிக்கப்படுகிற போது முரன்பாடாக இறக்குமதிவிலையும் அதிகரிக்கும்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு உள்நாட்டு, வெளிநாட்டுபாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்றார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.