மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில், நுகர்வோர் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில், 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு 100 சதவீதம் தீர்வு காணப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மனுதாரர்கள் தங்களது வழக்குகளை இ-டாக்கிள் (e-Daakhil) வாயிலாக ஆன்லைனிலும், பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர், தேசிய மற்றும் மாநில அளவிலான நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் காணொலி வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |