இந்திய எல்லைக்குள் தொடர்ந்துவரும் சீன ஊடுருவல்களை தடுக்க இந்தியா கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பல்வேறுகட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ஜகத் பிரகாஷ் நத்தா பேசும் போது, அருணாசல பிரதேசத்தில் சக்லகாம் பகுதியில் சீனராணுவத்தினர் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைப்பகுதிக்கும் 20 கிலோமீட்டர் வரை இவர்கள் ஊடுருவியிருக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற மற்றொருசம்பவத்தில், 25 சீனராணுவத்தினர் இந்தியபகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்தசம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதிதான் நமதுகவனத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்பகுதியில் அதிக அளவில் இந்திய ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, சீனவீரர்கள் வெளியேறினர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 19-இல் அதேபகுதியில் சீனர்கள் மீண்டும் ஊடுருவி கூடாரமிட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சீனராணுவத்தினர் 600முறை இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இதில் கடந்த 8 மாதங்களில்மட்டும் 150 முறை ஊடுருவியுள்ளனர். இதுமிகவும் தீவிரமான பிரச்னையாகி வருகிறது. சீனாமீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திரும்ப திரும்ப நடைபெற்றுவரும் ஊடுருவல்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விஷயம் தொடர்பாக அரசு அவசர கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக உறுப்பினர் ரவிசங்கர்பிரசாத் கூறினார்.
இந்தவிவகாரத்தில் இந்திய நிலைப்பாடு, கொள்கை என்ன என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கவேண்டுமென சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கூறினார்.
சீன ஊடுருவல் விவகாரத்தை அவையில் விவாதிக்கவேண்டும் என உறுப்பினர்கள் கோரிய போது, அதுதொடர்பாக நோட்டீஸ் அளிக்குமாறு அவையின் துணைத்தலைவர் பிஜே.குரியன் தெரிவித்தார்.
சீனா மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க உறுப்பினர் ஜகத்பிரகாஷ் நத்தா தெரிவித்த கருத்துக்கு பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.