ஓடும்பேருந்தில் டெல்லி மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு துணைமருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர்கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தவழக்கில் ராம்சிங், முகேஷ், பவன்குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் மைனர் என 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். ராம் சிங், டெல்லி திகார் சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான். மைனர் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது.
முகேஷ், பவன் குப்தா, வினய்சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய நான்கு பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவுநீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10ந்தேதி தீர்ப்புவழங்கியது.
11-ந்தேதி தண்டனை குறித்த இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன. இந்தவழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கவேண்டும் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள்செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணைகாட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்புவாதம். இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் மனம்திருந்தி வாழ ஒருசந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இன்றுபிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.