உபி மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பா.ஜ.க விவசாயிகள் அணிபேரணியை மதக்கலவரத்தை காரணம் காட்டி தந்த அனுமதியை ரத்து செய்து செப்டம்பர் 29ம் தேதிக்கு ஆளும் சமாஜ்வாதி அரசு தள்ளிவைத்து கருத்து சுதந்திரத்துக்கு இடையூரை ஏற்ப்படுத்தியுள்ளது
அகோலா கிராமத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிபேரணி ஞாயிற்றுக்கிழமை(இன்று) நடைபெறவிருந்தது. இதனால், அதற்கான ஏற்பாடுகளை அந்தக்கட்சியினர் தீவிரமாக செய்துவந்தனர். இந்த பேரணியில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானி, தேசியசெயலர் வருண்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். . இந்நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீரென ரத்துசெய்யப்பட்டது. அதற்கு பதிலாக செப்டம்பர் 29ம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் மதகலவரமாக உருவெடுத்து முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பரவியது.
இதனால் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில்கொண்டு பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தமாநில அதிகாரிகள் தெரிவித்தனர் அகோலா கிராமத்தில் விவசாயிகள் அணிபேரணி நடத்த 8 வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி பெறப்பட்டது. பேரணியில் மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் விவசாயிகள் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாவட்டநிர்வாகம் திடீரென ரத்துசெய்துள்ளது அந்த கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கருத்து சுதந்திரத்தை அந்தமாநில அரசு நசுக்க முயற்சிக்கிறது என பா.ஜ.க கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.