தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைப் பிடிக்காத பட்சத்தில் அவர்களை நிராகரிக்கும் வண்ணம் 'எதிர்மறை வாக்கை' பதிவு செய்யும் 'வேட்பாளரை நிராகரிக்க உரிமை' என்கிற முறையை அமல்படுத்துமாறு மாண்புமிகு உயர்நீதி மன்றம் நமது தேர்தல ஆணையத்தை அறிவுறுத்தி உள்ளது..
இதை முழுமனதோடு நான் வரவேற்கிறேன். இது நமது ஆட்சியமைப்பில் நீண்டதொரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் தேர்தல் சீர்திருத்தங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பாகவும் அமையும். அதே நேரம் மக்களாட்சி தத்துவத்தை துடிப்புமிக்கதாகவும், அனைவரையும் பங்கெடுக்கச் செய்வதற்கும் வழி செய்யும்.
நண்பர்களே, இத்தகு முறையை அமல் படுத்த வேண்டி நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கிறேன் . இது இல்லாமல் நமது தேர்தல் நடைமுறையில் ஏதோவொரு குறை இருப்பதாவே உணர்கிறேன். தற்போதைய நடைமுறையில் ஒரு தொகுதியில் பத்து வேட்பாளர்கள் போட்டியிடுகிற பட்சத்தில் அவர்களில் யாரேனும் ஒருவரை கண்டிப்பாக தேர்வு செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். ஆனால் அந்த பத்து பேரில் யாரையும் பிடிக்காத பட்சத்தில் அல்லது அந்த வேட்பாளரின் கட்சியை அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளின் கொள்கைகள் பிடிக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரையும் நிராகரிக்கும் உரிமை நமக்கு இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது வேட்பாளர் அல்லது அவர் சார்ந்த கட்சிகளின் மீதான நமது கோபத்தை நியாயமான முறையில் வெளிப்படுத்த அருமையானதொரு வாய்ப்பை இது நமக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. வாக்காளர்கள் தங்களை தேர்ந்தெடுக்காததற்கான காரணத்தை, வேட்பாளர்களும் கட்சிகளும் யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதோடு மட்டுமின்றி அவர்கள் எதிர்காலத்தில் பொறுப்புடன் செயல் படுவதற்கான வழியையும் அது ஏற்படுத்தும்.
வருகின்ற தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிக்கின்ற உரிமை அமல் படுத்தப்படுவதை பிற கட்சிகளைச் சேர்ந்த பல நண்பர்கள் விரும்ப மாட்டார்கள்! இது நன்றாகவே எனக்கு தெரியும்.அதை அவர்கள் வெளிப்படையாக சொன்னால் கூட ஆச்சர்யப் படுவதற்கு இல்லை.
நமது குஜராத்தில் கட்டாயமாக வாக்களிக்கும் சட்டத்தையும், வேட்பாளர்களை நிராகரிக்கின்ற உரிமையையும் அமல் படுத்த விரும்பி அதற்கான சட்ட வரைவையும் முன் வைத்தோம். விடுவார்களா இந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள்! தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்ற விடாமல் செய்து விட்டார்கள். கடந்த காலங்களில் 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் இதற்கான சட்டவரைவை நாங்கள் குஜராத் சட்ட மன்றத்திலே நிறைவேற்றினோம். ஆனால் காங்கிரஸ் கவர்னரை பயன்படுத்தி சட்டமாக்க விடாமல் நிறுத்தி வைத்து விட்டது.
கட்டாய வாக்களிக்கும் சட்டமானது நமது மக்களாட்சித் தத்துவத்தை மேலும் பலப்படுத்தும். தேர்தல்களின் மீதான நமது அச்சத்தையும் அது குறைக்கும்.அதோடு கட்டாய வாக்களிக்கும் சட்டமானது பண பலம் படைத்த கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஓட்டுகளை வாங்குவதை முற்றிலுமாக குறைக்க அது வழி வகை செய்யும்.
கட்டாயமாக வாக்களிக்கும் சட்டம் மற்றும் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை இவை இரண்டும் தனி மனித உரிமைகளை மீறும் செயல் அல்லவே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது உண்மையன்று. நமது தனி மனித உரிமையை அது மேலும் வலுப்படுத்தும். தற்போதய சூழலில் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ யாரேனும் ஒருவரை தேர்ந்துக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் அவர்கள் யாரையும் உங்களுக்குப் பிடிக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரையும் நிராகரிப்பதற்கு வழிவகை செய்து உங்களுக்கான தனி மனித உரிமையை 100% நீங்கள் வெளிப்படுத்த அது உதவும் என்றால் அது மிகை அல்ல. பிறகெப்படி அது உங்களது உரிமையை பறிப்பதாக அமையும். ஒரு பேச்சுக்காக கேட்கிறேன்,
தங்கள் குழந்தைக்கு கட்டாயக் கல்வி செல்ல பரிந்துரைத்தால், நாங்கள் தங்கள் குழந்தைகளின், குழந்தைப்பருவத்தை தடுப்பதாக நீங்கள் நினைப்பீர்களா?நீங்களே சொல்லுங்கள்.அது போலத்தான் இதுவும்.
ஒருமுறை காந்தியடிகளிடம், மக்களின் அடிப்படை உரிமைகள் என்னென்ன ?என்று ஒருவர் கேட்டார் .
அதற்குப் பதில் என்ன சொன்னார் தெரியுமா? அவற்றை நாம் அடிப்படை உரிமைகள் என்று நினைக்காது, அதை மக்களின் கடமையாக நினைக்க வேண்டும் என்று.
"நமது கடமைகளை நாம் சரியாகச் செய்யும் போது, நமக்கான உரிமைகள் தானாகவே பாதுகாக்கப்படும். நமது கடமைகளை நாம் சரியாகச் செய்யும் போது நமக்கான மக்களாட்சித் தத்துவம் பாதுகாக்கப்படும்"
ஆனால் நண்பர்களே, கட்டாயமாக வாக்களிக்கும் சட்டம் மற்றும் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை இவை இரண்டையும் நாம் பெருமையோடு பேசுகிற அதே வேளையில், நாம் நம்மை வாக்களர்களாக பதிவு செய்யாமல் இருந்தோமேயானால் நமது விவாதமானது அர்த்தமற்றதாகிவிடும்.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட அதிக எண்ணிக்கையிலான நமது இளைஞர்கள் தங்களை இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருக்கிறாகள் என்று கேள்விப் பட்டேன். இது உண்மையிலே மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. ' நமது தேர்தல் ஆணையமானது நாடு தழுவிய புது வாக்காளர் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதிவு செய்யாமல் இருக்கிற அனைவரும் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதே சமயம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிற வெளிநாடு வாழ் இந்தியர்களும் அங்கிருந்தே தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. தயவு செய்தது தேர்தல் ஆணைய இணையத்தில் அதற்கான விபரத்தை தெரிந்து கொண்டு தங்களை மறக்காமல் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மக்களாட்சியை நம்மால், நம் மக்களால் மட்டுமே பலப்படுத்த முடியும்.
வாக்காளராக நம் பாரதத்தின் விதியை மாற்றக் கூடிய சக்தி படைத்தவர்களாக நாம் இருக்கிறோம் . இன்றைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பானது மக்களாட் சித் தத்துவத்தை நிலை நாட்டுவதற்கான அருமையான ஒரு வாய்ப்பாகும். ஆனால் அதை பலப்படுத்த நாம் ஒன்று கூட வேண்டும். இதை செயல்படுத்தி மக்களாட்சியை தழைத்தோங்க வைப்பதோடு மட்டுமின்றி நமது பாரதம் ஒளிர வகை செய்ய வேண்டும்.
நன்றி ; நரேந்திர மோடி
நன்றி தமிழில் ; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.