ஒருவழியாக மாடுகளுக்கு நீதி கிடைத்து விட்டது

 17 வருட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக மாடுகளுக்கு நீதி கிடைத்து விட்டது, அங்கே அடிச்சி இங்கே அடிச்சி கடைசியாக மாடுகளின் வயிற்றில் அடிச்சி 900 கோடிக்கும் மேல் மாட்டு தீவன ஊழல் புறிந்த லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பும் வந்து விட்டது.

பீகாரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதாக கூறி ரூ.900 கோடிக்கும் மேல் ஊழல் நடந்தது. மாநிலத்தின் பல கருவூலங்களில் போலி ரசீதுகள் மூலம் மாடுகளுக்கு தீவனம் வாங்கியதாக கூறி பணம் எடுக்கப்பட்டது. எந்த கால்நடை வளர்ப்பவர் பெயருக்கு கருவூலத்திலிருந்து தொகையை மானியமாக வாங்குகிறார்களோ அவருக்கு 20 சதவீத பணத்தையும், அதிகாரிகள் மற்றும் அரசியில்வாதிகளுக்கு மீதமுள்ள 80 சதவீத பணத்தையும் பிரித்துக் கொடுத்துள்ளனர். . இப்படியாக சாய்பாசா மாவட்ட கருவூலத்திலிருந்து மட்டும் ரூ 37.70 கோடி பணம் பெறப்பட்டிருந்தது சி.பி.ஐ விசாரணையில் தெரிய வந்தது.

அதாவது ஊழல் செய்ததோ 950 கோடி , வழக்கு, விசாரணை, சாட்சி, தண்டனை, தீர்ப்பு என வந்ததோ வெறும் ரூ 37.70 கோடிக்கு மட்டும்தான். மீதிக்கு சாட்சியமில்லை எனும் போது இந்த வழக்கின் மேம்போக்கான நீதியை நம்மால் உணர முடியும்.

இந்த ஊழல்தொடர்பாக முதல்வர்களாக இருந்த லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 56 பேர் மீது புகார் கூறப்பட்டடு 1996ல் சிபிஐ விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையில் வழக்கு விசாரணையின் போது 7 பேர் இறந்தனர். சிலர் அப்ரூவராக மாறினர். ஒருவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஒருவழியாக கடந்த
17 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பல தடைகளுக்கு மத்தியில் நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி பிரவாஸ் குமார் சிங் தீர்ப்பளித்தார். மாட்டு தீவன ஊழலில் முன்னாள் முதல்வர்கள் லாலுபிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா, 6 அரசியல்வாதிகள் (இதில் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜகதீஷ் சர்மாவும் ஒருவர்), 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்றும் இதில் லூலுபிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையையும் , முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறை  தண்டனையையும் நீதிபதி வழங்கியுள்ளார்.

லல்லு பிரசாத் யாதவ் பீகார் அரசியலில் ஒரு தவிக்க முடியாத சக்தி, 1990 ஆம் ஆண்டிலிருந்து 2005 ம் ஆண்டு வரை ஒரு மாநிலத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும், அதாவது கிட்டத்தட்ட பீகாரில் ஒரு காட்டு தர்பாரையே நடத்தியவர். மக்களின் ஓட்டை பெற வளர்ச்சி திட்டங்கள் முக்கியம் இல்லை சாதி , மத (யாதவ், இஸ்லாமிய வாக்குகள்) பிரிவினைகளே போதும் என்ற கோட்ப்படுகளை உருவாக்கியவர்.

2005 ம் ஆண்டு பீகாருக்கு ஒரு திருப்பு முனை ஆண்டு என்றே கூறலாம் , 2005 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பீகாரிகள் லாலு பிரசாத் யாதவ்வை தூக்கி எறிந்தனர். மேல்தட்டு , நடுத்தர வர்க்கம் மட்டும் அல்ல , வறுமையில் வாழ்ந்த யாதவ சமூக மக்கள் கூட இவரை நிராகரித்தனர். இனி பீகாரில் குப்பை கொட்ட முடியாது என்பதை உணர்ந்து ஏற்க்கனவே மத்தியில் குப்பை கொட்டி கொண்டிருந்த காங்கிரஸ்சுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சராகவும் ஆனார்.

இதன் மூலம் சிபிஐ விசாரணையை கட்டுப்படுத்திவிடலாம் என்று கணக்கும் போட்டார். அவர் கணக்கு தப்பாகவில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் 950 கோடி ரூபாய் என்ற ஊழல் கழுதை 37.70 கோடி என்ற கட்டெறும்பாக அல்லவா மாறிவிட்டது?.
சரி தண்டனை கிடைப்பது உறுதி ஒருவேளை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்து விட்டால் பதவி பறிப்பிலிருந்து தப்ப முடியாது என்பதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கும் தேர்தலில் போட்டியிடவும் முடியாதே.

உடனே இதை ஒரு அவசர சட்டத்தின் மூலம் தடுக்க முயன்றார் . ஆளும் அரசும் தற்போது முறைகேடு வழக்கில் உள்ளே சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ரசீத்மசூத்தையும் எதிர் காலத்தில் வரிசையாக உள்ளே போகப்போற தங்கள் சகாக்களையும் காப்பாற்ற தோதாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்தது . ஆனால் சட்டம் உருப்பெற்று ஜனாதிபதியின் கையெழுத்துக்கு போகும்வரை உருவமாக இருந்த இளவரசர் ராகுல் காந்தி, பிறகு திடீர் என்று பொங்கி எழுந்து விட்டார். இந்த சட்டம் முட்டாள் தனமானது , இதை கிழித்து எறியவேண்டும் என்று பீகாரில் நிதிஸ் இருக்கும் தைரியத்தில் இந்த சட்டத்துக்கு முட்டுக்கைட்டையும் போட்டுவிட்டார்.

சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை பீகாரில் இந்த லால்லு இருப்பான் என்று லொள்ளு பேசிக்கொண்டிருந்த இந்த லல்லு இனி ஊசிப்போன சமோசா என்பதையே காங்கிரசின் கைவிரிப்பு காட்டுகிறது , உப்பு தின்னவன் தண்ணி குடித்துதான் ஆகவேண்டும். ஊழல் செய்தவன் சிறையில் களி தின்னுதான் ஆகவேண்டும் என்பதையே லல்லு , ரசீத்மசூத்து போன்றவர்களின் சிறை வாசம் காட்டுகிறது.

தமிழ் தாமரை VM . வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...