ராகுல் காந்தி தானும் கொல்லப்படலாம் என்று பேசி அனுதாபம்திரட்டும் முயற்சியில் பேசியுள்ளது கேவலமாக உள்ளது. பா.ஜ.க.,விற்கு எதிரான உணர்வைதூண்டும் விதமாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். என்று பாஜக. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; தற்போது ஓட்டுக்களைபெறுவதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே ராகுல் காந்தி மீது காங்கிரஸ் கட்சியே தாக்குதலை மேற்கொண்டு பா.ஜ.க.,தான் காரணமென கூறுவார்கள். இதற்கு ராகுல் காந்திக்கு தகுந்த போலீஸ்பாதுகாப்பு வழங்கவேண்டும்.
மதவெறியை தூண்டுவது காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் அனைவரும் பாரததாயின் குழந்தைகள் என பாஜக, ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் இஸ்லாமியர்களை கொம்புசீவிவிட்டு வருகிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகிவருகிறது. புதியவாக்காளர்கள் நரேந்திரமோடியை விரும்புகிறார்கள்.
சமீபத்தில் வெளியான கருத்துகணிப்பில் தமிழகத்தில் 2 சதவீதமாக இருந்த வாக்குவங்கி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்தபிறகு 10 சதவீதமாகியுள்ளதாக தெரிவிக்கிறது. தமிழகத்தில் 1967ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அதன் பிறகு தி.மு.க, அ.தி.மு.க மாறிமாறி ஆட்சிசெய்து எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாற்றுசக்தியாக பாஜக தலைமையில் மாற்று அணி அமையக் கூடுமென்பது என்னுடைய தனிப்பட்டகருத்து. பாரதநாட்டின் பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாத்தே, வல்லரசாக வேண்டுமென்பதே பா.ஜ.க.,வின் நிலைபாடு.என்று அவர் கூறினார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.