குஜராத் மாநிலம்தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய்பட்டேல் அருங்காட்சியக திறபூ விழா நடைபெற்றது. இதில் பிரதமன் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அதே விழாவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியும் கலந்துகொண்டார்.
பின்னர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்துதெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கிதரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
‘குஜராத்’ மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலைதொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கிதருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.
அதற்கு மறுப்புதெரிவித்து விட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில்தான் குறியாக இருந்தார்’ என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.