குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.
குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அப்போது பிரதமர், ராணுவ வீரர்கள் உடையை அணிந்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்தாண்டு, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையையொட்டி லெப்சா பகுதிக்கு சென்ற பிரதமர் ராணுவ உடை அணிந்து, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |